அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
வரலாறு
 
Events Calendar
<< April 2019 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Sunday, 21 April 2019
வரலாறு

இணுவில் அருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

- வரலாறு


                          “ஏரார் இணுவில்வாழ் எந்தை கணபதியின்
                            தாரார் திருவடியைத் தாழ்பணிந்தோர் - ஆரா
                            அமிழ்தம்போல் வாழ்வர் அருட்செல்வம் சூழ்வர்
                            தமிழுள்ளளவுந் தழைத்து”


                                                                                                              -திருமுருக கிருபானந்த வாரியார்.

 இணுவில்

 


 
சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமே இணுவை யம்பதியாகும். 


இணுவில் கிராமமானது ஆதிகாலத்தில் குளத்தங்கரை நாகரீகத்திற்கு பெயர்போன குடியிருப்புக்களில் ஒன்றாகும். “இணையிலி” என்ற பெயரே இணுவில் ஆக மருவி வந்திருக்கின்றது.  இணுவில் என்பது முங்கில் அடர்த்தியாக இருந்த படியாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இக்கிராமமானது தற்போதும் பனை, தென்னை, வாழை, மா, பலா, போன்ற கனிமரங்களைக் கொண்டு பசுமையாகவே காட்சி தருகின்றது.  இங்கு பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற செம்மண் உடைய விவசாய நிலங்களைக் கொண்ட பூமி இது.

 
தமிழரசர் காலத்தில் திருக்கோவலூரில் இருந்து வருவிக்கப்பட்ட, பேராயிரமுடையான் எனும் வேளாளனும், அவனது பரிவாரத்தினரும் இணுவிலில் குடி அமர்த்தப்பட்டார்கள் என்று “யாழ்ப்பாண வைபவமாலை” எனும் வரலாற்று நூல் கூறுகின்றது. அப்போது பேரூர்களாக விளங்கிய பன்னிரண்டு ஊர்களில் இணுவில் கிராமமும் ஒன்றாகும்.

 

 தெற்கே பிள்ளையாரையும், மேற்கே கந்தசுவாமியாரையும், கிழக்கே சிவகாமி அம்மன், காரைக்கால் சிவன் கோயில்களையும் மேலும் பல தலங்களையும் கொண்ட, திருக்கோயில்களாலே சூழப்பட்ட தெய்வீக மணம்பரப்பும் கிராமம் இது. இங்கு வாழ்கின்ற மக்கள் சிறந்த கலைஞர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், தான,தர்ம காரியங்களில் காரியங்களில் ஈடுபடும் தர்மவான்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

 
ஸ்ரீ பரராஐசேகர மன்னன்.


 
இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயில் வரலாறு என்பது நல்லூரை தலைநகராகக்கொண்டு  யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் அரசாண்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. இவர்கள் பரராஐசேகரன். செகராஐசேகரன் என்ற சிம்மாசனப் பெயர்களைக் கொண்டும். சிங்கை நகரை. யாழ்பாண இராட்சியத்தின் தலைநகராகக் கொண்டும் நல்லாட்சி புரிந்து வந்தனர். இவர்கள் “சிங்கை” என்ற ஆரியப்பட்டத்தை சுருக்கி தம்பெயர்கட்கு முன்னால் இட்டுக்கொண்டார்கள். “சிங்கைப்பரராஐசேகரன்.” (இரண்டாம் தமிழ்ச்சங்கம் இவன்காலத்தில் நிறுவப்பட்டதெனவும். “இரகுவமிசம்” இக்காலத்தில் இயற்றப்பட்டதெனவும் இராசநாயகம் முதலியார் உடன்படுகின்றார். யா.ச.ப-77)

 

ஆதிச்சிங்கை நகர்

தமழ் அரசர் ஆட்சிக்காலம். சிங்கை ஆரியன் (விஐயகூளங்கைச்சக்கரவர்த்தி) முதற்கொண்டு கி.பி 948ல் இருந்து பதினொராவது தலைமுறைச்சேர்ந்த கனகசூரிய சிங்கையாரியன் 1440 – 1450 வரை என அறியமுடிகிறது. (வைபவமாலைஇப26) “சிங்கை” எனும் தலைநகர்ப்பேரும்இ சாதிக்காரன் எனும் பொருளில் வரும் “ஆரியன்”. என்ற பெயரையும் சேர்த்து “சிங்கையாரியன்” என்ற பெயரை வைத்துக்கொண்ட இவர்களது குலம் ஆரியச்சக்கரவர்த்திகள் குலம் என அழைக்கப்பட்டது. இவர்கள் ஒருவர்பின் ஒருவராக தலைநகரை மாற்றாது இந்த நீண்ட காலத்திற்கு ஆட்சிபுரிந்து வந்தனர். 1450ல் கொழும்பு கோட்டையை ஆண்ட செண்பகப்பெருமான் எனும் அரசன் படையெடுப்பில் கனகசூரிய சிங்கையாரியன் தோற்று தமிழகம் சென்றான். செண்பகப்பெருமானால் நியமிக்கப்பட்ட விஐயபாகு என்ற சிங்களப் பிரதிநிதி (மன்னன்) பதினேழு ஆண்டுகள் வரை தமிழர்களை அடக்கிஇயொடுக்கி அரசாண்டான். (யா.வை.மா.-45) போரில் தோற்று காசி யாத்திரை செய்த கனகசூரிய சிங்கையாரியன் திருக்கோவலூர் சென்று அங்கு கல்வி பயின்று கொண்டிருந்த தம் பிள்ளைகளான பரராஐசேகரன். செகராஐசேகரன் உடன் சேர்ந்து மீண்டும் படையெடுத்தான்.

கனகசூரிய சிங்கையாரியன் பாண்டிய சிற்றரசர்களின் உதவியுடன் விஐயபாகு மீது மீண்டும் படையெடுத்து பெருஞ்சமர் பண்ணினான். செகராஐசேகரன் ஒரு அணியாக சண்டைசெய்ய, பரராஐசேகரன் அஞ்சாநெஞ்சனாக தனது வாள்ப்படையுடன் விஐயபாகுடன் பெரும் யுத்தம் செய்து அவனை தன் வாளுக்கு இரையாக்கினான். மீண்டும் சிங்கைநகர், சிங்கையாரியர் வசமாகியது. பரராஐசேகரன் தனது தந்தை கனகசூரியஆரியனை ஆட்சியில் வைத்து தான் தேசவிசாரணை செய்ய முயன்றான். அனால், பிதாவாகிய கனகசூரியன் பரராஐசேகரனை அரியணை ஏற்றி தான் இளைப்பாறினான்.  இது தமிழ் அரசர்களின் இரண்டாவது ஆட்சிக்காலம் என்று கூறலாம்.

  கனகசூரியன் - கி.பி- 1467.
  பரராஐசேகரன்- கி.பி- 1478.
 சங்கிலி    - கி.பி-  1519.


இவர்கள் 1620 வரை சுதந்திரமாக ஆட்சி புரிந்தார்கள். அதன்பின் போத்துக்கேயர் வருகை ஆரம்பமாகியது.

இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் வரிசையில் ஸ்ரீ பரராஐசேகரமன்னன். இவன் நல்லூரை தலைநகராகக் கொண்டு நீதிநெறி தவறாது நல்லாட்சி புரிந்து வந்தான்.; சிங்கைப் பரராஐசேகரன் என்று அழைக்கப்பட்ட இவன் மக்களிடையே அன்பும் கருணையும் கொண்டவனாகவும், இறைபக்தி மிகுந்தவனாகவும், சிறந்த நிர்வாகத்திறன் உடையவனாகவும், திகழ்ந்தான் என்பது வரலாறு. யாழ்ப்பாண இராட்சியத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் 1478ம் ஆண்டு இவன் அரியணை ஏறினான். பதினொராவது தலைமுறையைச்சேர்ந்த இவனது ஆட்சிக்காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்திலோஇ அல்லது இதற்கு முன்னைய காலங்களிலோ இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம். தமிழ்ச்சங்கம் நிறுவி சமயம் வளர்த்தது அல்லாமல் “பரராஐசேகரன் உலாவும்”, “இரகுவமிசம்” போன்ற நூல்கள் இவனது ஆட்சிக்காலத்திலே அரங்கேற்றப்பட்டன. தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட வைத்தியர்களைக்கொண்டு “பரராஐசேகரம்” என்ற வைத்திய நூல் ஒன்றும் இவனது ஆட்சிக்காலத்திலே உருவாக்கப்பட்டது. (“செகராசசேகர மாலை,” “தட்சிண கைலாய புராணம்” என்பன சிங்கை நகர் இராட்சியம் பற்றிக்கூறுகின்றன.)

நல்லூரிலே சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஆரியச்சக்கரவர்த்திகள் சிறந்த நூலாசிரியர்களாகவும் விளங்கியிருக்கின்றனர். நாயன்மார்க்கட்டு, நல்லூர், இணுவில் போன்ற பன்னிரண்டு ஊர்களும் அறிஞர்கள், கலைஞர்கள், புலவர்கள் நிறைந்த பேரூர்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஆரியச்சக்கரவர்த்திகளுள் சிறந்து விளங்கிய  “செகராஜசேகரன்” என்ற  மன்னன் தமிழகத்தில் இருந்து அரியநூல்கள், ஏட்டுச்சுவடிகள், ஆவணங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டுவந்து  “சரஸ்வதிமகால்”  என்ற நூலகத்தை அமைத்தான் என்றும்,  அறியமுடிகின்றது.

 

ஸ்ரீ பரராஐசேகரமன்னன் ஆட்சிக்காலத்தில் சமயவழிபாடு, ஆலயம் அமைத்தல் பரிபாலனம் செய்தல் என்பன அக்காலத்தில் அமயப்பெற்றதாக கருதப்படும் கோயில்கள் பற்றின கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் தமது “யாழ்ப்பாண இராட்சியம்” (ப-218) எனும் நூலில் “விநாயகர் வழிபாடு இக்காலத்தில் மேன்மை பெற்று இருந்ததை  ஆரியச்சக்கரவர்த்திகள் அமைத்த காவல் தெய்வங்களில் விநாயகர் ஆலயம் முக்கியம் பெறுவது எடுத்துக்காட்டுகின்றது. இதுமட்டுமின்றி இவர்கள் காலத்துக்குரிய உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோயில், அரசகேசரி பிள்ளையார்கோயில், இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் ஆகியனவும் இக்காலத்துக்குரிய சிறப்புப்பெற்ற விநாயகர் வழிபாட்டிடங்கள் ஆகும்” என்று குறிப்பிடுகின்றார்.

 
அந்நியர் ஆட்சி
 

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவாத்திகள் கோயில்கள் அமைத்தது பற்றிய செய்திகளை யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று நூலில் இருந்து தெளிவாக அறியமுடிகின்றது. (வைபவமாலை ப26) “ஆதிச்சிங்கையாரிய மன்னன் கீழ்த்திசைக்கு காப்பாக வெயில்உவந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமகாளியம்மன் கோயிலையும், வடதிசைக்கு சட்டநாதர் கோயிலையும், தையல்நாயகியம்மன், சாலைவிநாயகர் கோயிலையும் நாற்றிசையும் கட்டினான், உட்பக்கம் அரண்மனை இருந்தகளம் ஆகும்.) இதற்குள்ளேதான் சங்கிலியன்தோப்பு, யமுனா ஏரி இருக்கின்றன. அக்கோயில்களில் இருந்த விக்கிரகங்கள் இப்போதில்லை. பின்வாழ்ந்த மக்கள் பறங்கியரால் இடிக்கப்பட்ட இக்கோயில்களை மீளக்கட்டி விக்கிரகங்களை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.”

 

பரராஐசேகரப்பிள்ளையார் என்னும் ஆரியச்சக்கரவர்த்திகள் வழிவந்த தமிழ் அரசனின் பெயரை தாங்கி நிற்கும் இவ்வாலயம் ஆனது சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பை பெறுகின்றது. பரராஜசேகர மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகவோ, பரராஜசேகர மன்னனின் மந்திரி பிரதானிகளால் அல்லது பேரூரின் ஆட்சித் தலைவர்களினால் கட்டப்பட்டதாகவோ அன்றியும் பரராஜசேகர மன்னனால் வழிபடப்பெற்று வந்தமையினால் பரராஜசேகரப் பிள்ளையார் என்ற பெயரை பெற்றிருக்கலாம். “அக்காலத்தில் இருந்து நீடித்து நிலைத்திருந்த இக்கோயில் பரராஜசேகரன் சகாப்தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவையும் பெற்று, அரசனது நாமம் சூட்டபட்டிருக்கலாம்” என்று கூறுகின்றார் தொல்பொருள் ஆய்வாளர் திரு ம.பொ.செல்வரத்தினம்.  அவர்கள். இணுவில் எனும் பேரூரானது  சான்றோர் புகழும் ஆன்றோர்க்கு உறைவிடமாய் சைவவேளாண் மக்கள் வசிக்கப்பெற்றதுமாய, கொன்றையும், கூவிளையும், மருதும், அரசும், தேமாவும், தீம்பலாவும், புட்பங்களுமான வசீகரமிகு நந்தவன பூமியான இணுவையம்பதியை விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பும் புண்ணியபூமியாக பரராசேகரன் கருதினான்போலும் அதனாலேயே இங்கு ஆலயம் எழுப்பதுணிந்தனன்.   என மகாவித்துவான் வை கதிர்காமநாதன் ஆசிரியர் அவர்கள் கும்பாபிசேகமலர்-1972ல் குறிப்பிடுகின்றார்.        

 

 

  பரராஜசேகர மன்னன் ஆட்சிக்குட்பட்ட இணுவில் என்னும் பேரூரானது கரும்பும் பருத்தியும் நெல்வயல்களும், குளங்களுடன் கூடிய கமுகு தென்னை பனை போன்ற வானுயர்ந்த மரங்களுடன்  ஒரு பூஞ்சோலைக் கிராமமாக செழிமை மிகுந்து காட்சியளித்தது. பரராஜசேகர மன்னன் தனது மந்திரிப் பிரதானிகளுடன் இணுவையம்பதியினிலே எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பிள்ளையாரை வணங்கி வந்தான் என்று கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாக அறியமுடிகின்றது.

 
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் “இணுவிலும் ஆரியசக்கரவர்த்தி காலத்தில் ஏற்பட்ட வேளாளர் குடியேற்றத்துடன் தொடர்புடையதாக காணப்படுவதால் இவ்வாலயம் இவர்கள் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என்று தமது யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். (ப-220)

 

முதல்முதலாய் பறங்கியர்கள் 1428ம் ஆண்டு வியாபாரிகளாக பராக்கிரமபாகு மகாராஐhவிடம் உத்தரவு பெற்று இலங்கைக்குள் புகுந்துகொண்டார்கள். நல்லூரிலே கி.பி 1560ம் ஆண்டு போத்துக்கேயருக்கும் சங்கிலி மன்னனனுக்குமிடையே முதலாவது யுத்தம் நடைபெற்றது. சுமார் பதினாறாயிரம் பறங்கியர்களை கொன்று இந்த யுத்தத்தில் சங்கிலி வெற்றியடைந்தான். ஆயினும் காக்கை வன்னியனின் துரோகத்தினால் சங்கில் போர்த்துக்கேயரால் சிறைபிடிக்கப்பட்டான். அவர்கள் காளிகோயில் முன்றலில் அவனை சிரைச்சேதம் செய்து கொன்றார்கள்.(யா.ச.ப.70).;. சங்கிலி குமாரனே (ஆட்சி 1616 – 1620.) யாழ்ப்பாணத்தை பல நூற்றாண்டாக ஆட்சிசெய்த சந்ததியாரின் இறுதி அரசன். போர்த்துக்கேயரிடம் போர்க்கைதியானான். இத்துடன் தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின்  பறங்கியர்கள் சிவாலயங்களையெல்லாம் இடித்தழித்ததுடன், தமது சமயத்தையும் பரப்பத்தொடங்கினார்கள்.

 
மன்னாரும், யாழ்ப்பாணமும் ஒரேஆண்டில் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டன. பறங்கியர்கள் அதிகமாய் தாங்கள் இடித்தழித்த இந்துக் கோயில்கள் இருந்த இடங்களிலே தங்கள் கோயில்களைக் கட்டினார்கள். ஒல்லாந்தரும் அப்படியே அந்த கோயில்களை உபயோகித்தார்கள். பாதிரிமார்கள் கல்வியறிவில்லாத பாமர மக்களிடையே  வீடுவீடாக சென்று விவிலிய நூலை முற்றங்களிலே உரல்மீது அமர்ந்து போதித்தார்கள். (யாழ்ப்பாண வைபவமாலை குல சபாநாதன்.) ஆனாலும் அவர்கள் இருந்த உரலை சாணத்தால் சுத்தம்செய்தது கண்டு, தங்கள் நோக்கம்

 

இக்காலத்திலே பல கோயில்கள் பறங்கியரால் இடிக்கப்பட்டன. உடுவில் கோவில்பற்றை முற்றுகையிட்ட போர்ததுக்கேயர், இணுவில் என்னும் பேரூர் பரராஜசேகரப்பிளளையார் கோவிலையும் இடிக்கத்தலைப்பட்டார்கள். மன்னனால் வணங்கப்பெற்ற இக்கோயிலை பாதுகாக்க எண்ணிய மக்கள் இங்குள்ள பிள்ளையாரை மறைத்து வைத்து, இத்தலத்தை “மடம்” என்று கூறினார்கள். கோயிலின் முன் மண்டபம் மடம்போன்று காணப்பட்டது.  இப்படியாக பாதுகாத்தனர் என்று கர்ணபரம்பரை ஒன்று கூறுகிறது.  “மடம்” என்று சொல்லி வணங்கியமையால் இக்கோயிலை “மடத்துவாசல் பிள்ளையார் கோயில்” என்றும் வழங்கலாயினர். இந்த மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பற்றிய வரலாறு என்பது இந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இப்படியாகத்தான் இருந்திருக்கவேண்டும். இருந்திருக்கின்றது. பூசைகளோ, திருவிழாக்களோ நடைபெறமுடியாமைக்குரிய காலச்சூழலில் இவ்வாலயமானது பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் போதியபராமரிப்பின்றி ஆலயம் கீலமுற்றுக் கிடந்தது. இக்காலப்பகுதியில் இப்படியாக மட்டும்தான் கொள்ளமுடிகின்றது. சமயஆச்சாரங்களில் மிகவும் ஊறிப்போன ஆச்சாரசீலர்களைக் கொண்ட ஊர் இணுவில் ஆகையால் மதமாற்றம் என்பது இங்கு எள்ளளவும் நடந்ததாக தோன்றவில்லை. ஆனால் இக்காலச்சூழலானது ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்திலே ஓரளவிற்கேனும் மாற்றங்காணத் தொடங்கியது, எனலாம்.

 
மடத்துவாசல் பிள்ளையார் கோயில்
 

ஆங்கிலேயர் தங்கள் பலத்தினாலும் நுண்ணறிவினாலும் 1718ம் வருடத்தில் ஒல்லாந்தரிடம் இருந்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக் கொண்டர்கள். இவர்கள் முன்னிருந்த அரசுகளைப்போல குடிகளை வருத்தாது சமயசுதந்திரம் பேணினார்கள். சமயம் பரப்பும் விடயத்தில் இவர்கள் மூர்க்கமல்லாது சாதுரியமான வழிகளை கையாண்டார்கள். வித்தியாசாலைகள் இவர்கள் அனுமதியுடன் எழுந்தன. கல்வியறிவும் விருத்தியடையத் தொடங்கியது. சமய அறிவு, பற்று, திருப்பணிவேலைகள் மெல்ல மெல்ல தொடங்கியது. சைவசமயம் பல பெரியார்கள் மூலம் மறுமலர்ச்சி பெறத்தொடங்கியது. இக்காலப்பகுதியில் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் மீண்டும் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலாக மாற்றங்காணத் தலைப்பட்டது. இம்மாற்றமானது. சமய மறுமலர்ச்சியல்லாமல் சுதந்திர மத வழிபாடுகளாக பரிணமித்தது. 1800 களில் மடாலயமாக இருந்த கோயில் திருத்தி அமைக்கப்பட்டு சுன்ணாம்புக் கற்களால் முறைப்படி கட்டப்பட்டு கும்பாபிசேகமும் நடைபெற்றிருக்கின்றது என்பதை அறியமுடிந்தாலும் சரியான ஆண்டு விபரங்களை பெறமுடியவில்லை.

 

1800களில் சுன்ணாம்பு கற்களாலான விமானம், கர்ப்பக்கிரகம் உடன் அர்த்தமண்டபம் மகாமண்டபமும் ஆனால் சற்று கிழக்கே சிறிதாக இருந்தன. மூலமூர்த்தியைத் தவிர இங்கு எழுந்தருளிப் பிள்ளையாரும், சண்டேசுவர மூர்த்தியும், வைரவரும் அக்காலப்பகுதியில் அடியார்களால் வழிபடப்பெற்றிருக்கின்றது. சுப்பிரமணியரோ வேறுஎந்த தெய்வங்களோ அக்காலப்பகுதியில் இருக்கவில்லை. சதய நட்சத்திரத்தில் கொடியேறி திருவாதிரையில் தேர் இழுத்திருக்கின்றார்கள். புனர்பூசநட்சத்திரத்தில் தீர்த்தமும் நடைபெற்று அன்றே கொடிஇறக்கல் திருவிழாவும் நடைபெற்றுள்ளது. திருக்கல்யாணம் இல்லை. ஆனால் தேரடி வைரவர் பொங்கல் நடைபெற்று இருந்தது. அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்றாற்ப்போல் திருவிழாக்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ அன்றியும் சிறப்பாகவோ, ஆனால் ஆகமவிதிப்படி நடைபெற்றிருக்கின்றன.

 

இந்தக்காலப்பகுதியில் வருடாந்த உற்சவங்களைத் தவிர, பல திருவிழாக்கள், உற்சவங்கள், அபிஷேகங்கள் என்பன நடைபெற்றுள்ளன. குறிப்பாக விநாயகர் பெருங்கதை 21 நாட்களும் அபிஷேகஆராதனைகளுடன் படிப்பும் நடந்துள்ளது. 21ம் நாள் சூரன்போர் நடந்தது. தற்போதைய சூரன் அல்ல, இது பழையசூரன் 1928ம் ஆண்டிற்கு முன்னரே பழுதடைந்து விட்டது. மற்றும் திருவெம்பாவை, ஐப்பசிவெள்ளி, தைப்பொங்கல், வருடப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி மானம்பூ போன்றன விசேடதினங்களாக அக்காலத்தில் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இவைதவிர்ந்த தினங்கள் பிற்காலத்திலே தொடக்கம்பெற்றவை ஆகும்.

 

கோயில் அமைந்துள்ள இடம் தம்பிளாவத்தை என்ற குறிச்சிப்பெயரால் அழைக்கப்பட்டது. (இப்பெயர் தற்பொழுதும் அரச கோவையில் இடம்பெற்று இருக்கின்றது.) கோயிலுக்கு வடக்கே சிறிதாக ஒரு வசந்தமண்டபமும் இருந்தது. தென்கிழக்கு மூலையிலே தலவிருட்சமான நெல்லிமரமும். தெற்கே தீர்த்தக்கேணியும், அதற்கு சற்று மேற்குத்திசையாக ஓலையால் மேயப்பட்ட பள்ளிக்கூடமும் இருந்தது.(1864) கோயிலின் முன்பக்கம் தற்போதைய பாலமுருகன் கோயிலுக்கு அருகாமையில் இருந்தது கிணறு. திருமஞ்சனக்கிணறு வசந்த மண்டபத்திற்கு மேற்காக இருந்தது.  தேர்க்கொட்டகை இல்லாத காரணத்தால் கட்டுத்தேர் ஒன்று கோயிலின் தெற்கு வீதியின் வேலிக்கருகே ஓலையால் மூடப்பட்டநிலையில் இருந்தது. தம்பமண்டபம் கல்த்தூணினால் நிறுவப்பட்டு வேயப்பட்டிருந்தது. கோயிலில் மணியும் இருந்தது. அது தற்போதைய மணிஅல்ல. தற்போதைய வைரவர் கோயிலுக்கு அருகே சற்று உயரத்தில் இருந்தது. கோயிலின் உட்பிரகாரத்தை அதிகாலையில் சாணியால் கூட்டி மெழுகி விடுவார்கள். 

   .

பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலின் ஆரம்பம் முதலே இங்கு அந்தணர் குலத்தைச்சேர்ந்த பிராமணர்கள் பூசைகளை நடாத்தி வந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. தமது வாழ்வை இத்தலத்திற்கே அர்ப்பணித்த அந்தணர் பரம்பரையொன்று தொடர்ச்சியாக இக்கோயில் கிரியைகளை முறைப்படி செய்து வந்துள்ளார்கள். 1800 களில்  திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெற்றுள்ளமைக்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. மூலமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் இறைவன் விநாயகப்பெருமானது திருஉருவம் தமிழகத்து சிற்பவிற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும் அக்காலத்திலேயே மகோற்சவம் நடந்துள்ளது.  இங்குள்ள எம்பெருமான் வீதியுலாவரும் மூர்ஷிகம்(எலி வாகனம்) மிகவும் பழமைவாய்ந்த வாகனமாகும் இதுவும் 1867 ;ம் ஆண்டைச்சேர்ந்ததாகும். இங்குள்ள கொடித்தம்ப கவசம் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்கள் அது 1867ம் ஆண்டைச்சேர்ந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

    வாசகம் “இது இணுவில் தம்பிளாவத்தை எனுங்காணியில் எழுந்தருளியிருக்கும் பரராசசேகரப்பிள்ளையார் என்னுங்குருநாமத்திற்குமெஷகுடிகாலிங்கர் இராமநாதராஐ கொடுக்கப்பட்டது பராமரிப்பும் மயிலர் ஆறுமுகம்.1867”

 

1928ம் ஆண்டிற்கு முன்னைய பரராஐசேகரப்பிள்ளையார் ஆலயம் எப்படி இருந்திருக்கும் என்பதை இலகுவாக கற்பனை செய்து பார்ப்பதைவிட அக்காலப்பகுதியில் வாழ்ந்த, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்மூர் பெரியவர்களிடம் இருந்து அத்தகவல்களை இன்னமும் பெறக்கூடியதாக இருப்பது பலமே!

 

 


கும்பாபிஷேகம். – 1939  (1928 – 1939 )

 
இணுவில் பரரபஐசேகரப்பிள்ளையார் வரலாற்றை 1939ம் ஆண்டிற்கு முன், 1939ம் ஆண்டிற்கு பின், என்று இருகாலப்பகுதிகளாக வரையறுத்து நாம் நோக்கலாம். இந்த 1939ம் ஆண்டை ஒரு எல்லை ஆண்டாக நாம் குறிப்பிடுவதற்கு காரணம். வரலாற்று ரீதியாக முதலாவது பாலஸ்தாபனம் செய்யப்பட்ட ஆண்டு இது என்பதனால். 1928ம் ஆண்டு வைகாசி மகோற்சவம் முடிந்தபின்னர் ஆவணிமாதம். பாலஸ்தாபனம் செய்யப்பட்டடு பின் சுமார் பத்து ஆண்டுகள் திருப்பணிவேலைகள் நடந்திருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உண்மையான காரணம். நிதிப்பற்றாக்குறைதான். இவ்வூர்மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், சுருட்டுத் தொழிலாளராகவும், இசைவிற்பன்னர்களாகவும்தான் இருந்திருக்கின்றார்கள். அந்தக்காலசூழல், சமூகநிலை என்பன இக்கோயில்த் திருப்பணிக்கு பலம்சேர்க்கவில்லை. கோயிலை கட்டிமுடிக்கவேண்டும் என்ற எண்ணம், விருப்பம், அவா இருந்தளவிற்கு பொருளாதாரம் கைகொடுக்கவில்லை. வெள்ளைக்கற்களை பொழிந்து கற்கோவிலாக அமைக்கும் பணி இது. மிகவும் சிரமமானதொருபணி. கீரிமலையில் இருந்து மாட்டுவண்டிலில் சென்று இதற்கான கற்களை கொண்டுவந்தார்கள். இந்த கற்கள் ஓவ்வொன்றிலும் எம்முன்னோர்களின் வியர்வை படிந்திருக்கும். ஊரிலும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்தார்கள். அராலிச் சிற்பாச்சாரியார்களான நாகமுத்து மாணிக்கம், விசுவலிங்கம், கந்தப்பு, கணபதிப்பிள்ளை ஆகியோர் இப்போதைய கோயிலின் வடமேற்கு மூலையில் நின்ற கொன்றைமர நிழலில் கற்களைப் பொழிந்து கட்டுமானப்பணியை ஆற்றினார்கள். இக்காலப்பகுதியில் பிள்ளையாரை ஒரு சிறிய தகரக்கொட்டிலில் தம்பமண்டபத்தடியில் வைத்துப்பூசித்து வந்தார்கள்.

 

மிக நீண்டகாலமாக இத்திருப்பணி வேலைகள் நடந்து வந்தாலும் சிலவேலைகள் பூர்த்தியாகவில்லை 1936ம் ஆண்டு. கர்ப்பக்கிரகமும், விமானமும், அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பூhத்தியான நிலையில், நிருத்த மண்டபம் வெறும் தூணுடன் மட்டும் நின்றுவிட்டது. கர்ப்பக்கிரகமும், அர்த்த மண்டபமும், மகாமண்டபமும், நிருத்தமண்டபமும் ஆக இந்த நான்கு மண்டபங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும்.  அந்தவருடமும் கும்பாபிஷேகக்கனவு தகர்ந்து போனது. வேலைகள் பூர்த்தியடையாத நிலையில் எம்பெருமானை பிரதிஷ்டை செய்ய ஊர்ப்பெரியவர்கள் சிலர் விரும்பவில்லை. ஆனாலும் எம்பெருமான் கிருபையினால் நிருத்த மண்டப வேலைகள் பூhத்தியாகாத நிலையிலேயே 1939ம் ஆண்டு காhர்த்திகைமாதம், கும்பாபிஷேகம் நடந்தேறியது. இது ஒரு சுவாரிசமான சம்பவமாகும். எப்பொழுது எது நடக்க வேண்டுமோ அப்பொழுது அது தானாகவே நடக்கும். இவையெல்லாம் கடவுள் செயல்.

 

1939ம் ஆண்டும் அண்மையில் (26-12-2008.) பெய்த கடும் மழைபோன்றதொரு மழை பெய்தது. எங்கும் வெள்ளம். விநாயகர் பாலஸ்;தாபனம் செய்து வைக்கப்பட்டிருந்த தம்பமண்டபம் தாழ்வாகையால் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இப்படி வெள்ளத்தினுள் பிள்ளையார் இருப்பதுகண்டு அடியவர்கள் பலர் மனம் வருந்தினார்கள். இந்தச் சூழலில் உடனேயே பிள்ளையாரை பிரதிஷ்டை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே கார்த்திகை மாதத்தில் ஓர் இரவு நேர சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. ஆகமமுறைப்படி பதினொரு கும்பம் வைத்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தை; கோயிலின் பிரதமகுரு சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகமும் நடந்தேறியது. ஊர்மக்கள் எல்லோரும் ஆனந்தமடைந்தார்கள். இன்றுவரை இந்தக் கோயிலின் வளர்ச்சியையும் சிறப்பையும் பார்க்குமிடத்து இது ஒரு சிறந்த முகூர்த்தம் என இன்றும் இம்மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

 
கூடிவாழ்ந்தால் கோடிநன்மை. ஊர்சிறந்தால் கோயிலும் சிறக்கும். இதற்கு ஒவ்வொருவரினதும் உள்ளம் திறக்கவேண்டும். ஒற்றுமையும் தியாக சிந்தையும் உள்ள மக்கள் கூட்டம் ஒன்று இந்த கோயில் சிறக்க அரும்பாடுபட்டது. இது பொதுக்கோயில். ஊர்மக்களின் கோயில். எல்லோரும் ஒன்றுபட்டார்கள் இந்த கோயிலை முன்னேற்ற வேண்டும் என்று துடித்தார்கள். ஆனாலும் இந்த 1939ம் ஆண்டு கும்பாபிஷேகத்துக்கு பின்பும் கோயில் திருப்பணி மெதுவாகத்தான் நடைபெற்றது. வறுமை. காசு இல்லை. கோயில் தம்பமண்டபம், நிருத்த மண்டபம் என்பன பூர்த்தியாகாமலே இருந்தது. இதனால் கொடி ஏறவில்லை, ஆகமவிதிப்படி வருடார்ந்த மகோற்சவம் நடைபெறவில்லை. வெறும் அலங்கார உற்சவமாகத்தான் நடைபெற்றது. நாளாந்தப் பூசைகள் கூட தாமதமாகத்தான் நடைபெற்றது. கோயிலுக்கென்று ஒரு குடை கூட இல்லாத நிலையில் எம்பெருமான் இரவல்க் குடையிலே வலம்வந்தார். ஒரு பணம் கொடுத்து யாரும் அர்ச்சனைகூட செய்யக்கூட முடியாத ஒரு நிலையில் கோயில்க் குருக்களையும் இந்த வறுமை பற்றிக்கொண்டது.

 

1945ம் ஆண்டு ஒரு நாள் கோயில் அர்ச்சகரான சதாசிவக் குருக்களிடம் வந்த அடியவர் சிலர் கோயில் பூசைநேரங்களில் ஏற்படுகின்ற காலதாமதம் பற்றிய வினா எழுப்பினார்கள். அதற்கு சதாசிவக்குருக்கள். “முன்னரெல்லாம் முப்பது நாட்களும் பூசை செய்வதற்குரிய ஒழுங்கினை செய்து தந்தார்கள். ஆனால் இப்போ ஒரு பணம் தந்து அர்ச்சனைசெய்ய யாரும் இல்லை. பூசைப் பொறுப்புக்களையெல்லாம் என்னிடம் தந்து விட்டார்கள். எனக்கு பலசோலி. கஷ்ரம் என்ன செய்ய?” என்று வினாவினார். “பூசை செய்வதற்குரிய நைவேத்திய பொருட்;களை தந்தால் பூசையை நேரத்திற்கு செய்வீர்களா?” என்று அடியவர்கள் மீண்டும் கேட்க, குருக்கள் அதற்கு சம்மதித்தார். அன்றில் இருந்து தினமும் வீடுவீடாகச் சென்று பிடி அரிசி எடுக்கும் பணி தொடங்கியது. நித்தமும் கோயிலுடன் ஒன்றிப்போன அடியவர்கள் சிலர் தினமும் வீடுவீடாக சென்று அருசிசேர்க்கும் இப்பணியை செய்தார்கள். இதன்மூலம் கிடைக்கும் அரிசியில் குருக்களுக்கு கொடுத்தவை போக, மிகுதியை விற்று அந்தப்பணத்தில் தேங்காய் எண்ணெய் வாங்கி விளக்கேற்றினார்கள்.

 
இப்படி எத்தனை காலம்தான் செய்வது. கோயிலுக்கு நிரந்தர வருமானம் ஒன்றை தேடவேண்டும் என நினைத்தார்கள். அதற்கு ஊரில் உள்ள சுருட்டுத்தொழிலாளர்களின் உதவியை நாடினார்கள். தினமும் சுருட்டுக்கொட்டில்களில் ஒரு கட்டு சுருட்டை பிள்ளையாருக்கென எடுத்து தனியாக வைத்துவிடுவார்கள். இப்படியாகச் சேர்த்த பணமும் போதாமையால் 1955ம் ஆண்டு கோயிலின் வடக்கு வீதியில்  சிறிய ஒரு கட்டிடத்தை அமைத்து அதை “ஐக்கிய பண்டகசாலை” க்கு வாடகைக்கு வழங்கினார்கள். (தற்போதைய கூட்டுறவுச் சங்கம்.) அப்போதைய காலச்சூழலில் இந்த வாடகைப்பணம் கோயிலின் நித்திய கருமங்களுக்கு பெரிதும் உதவியது. அதன் பின் கோயிலின் உட்பக்க கூரைமாற்றி அமைக்கப்பட்டது. சுண்ணாம்பு தூண்கள் அகற்றப்பட்டு சீமெந்தில் தூண் போடப்பட்டது. முகடுபிரித்து நிலை,மரம் ஆகியன ஒழுங்காக இணைக்கப்பட்டன. முக்கியமாக தீபவிளக்கில் இருந்து மின்விளக்கிற்கு கோயில்மாறியது. கோயில் பிரகாசமாக காட்சியளித்தது. கோயிலுக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றதும் இக்காலப்பகுதியில் ஆகும். 

 
முன்னைய உற்சவங்களுடன் 1956ல், இக்காலப்பகுதியில் புதிதாக சதுர்த்தி உற்சவம் தொடங்கியது. பன்னிரண்டு மாதங்களுக்குரிய வளர்பிறைச் சதுர்த்தி திதியில் அபிஷேகஆராதனைகள் இடம்பெற்று விநாயகர் வீதியை வலம் வந்தார். அத்துடன் தைமாதம் சதுர்த்தியில் காப்புக்கட்டி தொடர்ச்சியாக புராணம் படிக்கப்பட்டு பங்குனி உத்தரத்தில் காப்பவிழ்ப்பு நிகழ்வுடன் திருக்குழுத்தியும் நடைபெறத்தொடங்கியது. ஊரில்உள்ள விநாயகர் அடியார்கள் எல்லோரும் அரிசி,தேங்காய்,பருப்பு,மரக்கறி போன்ற சமையலுக்குரிய பொருட்களையெல்லாம் கொண்டுவந்து ஊர்கூடி சமைத்துப் படைத்து உண்பார்கள். ஊர்கூடி தேரிழுத்தல், ஊர்கூடி அன்னதானம் செய்தல் போன்ற ஒற்றுமையுணர்வுகளின் மைய இருப்பிடமாக இந்த கோயில் அந்தக்காலத்தில் இருந்தே திகழ்ந்துள்ளது.  

 

கோயிலும், அதன் சூழலும் மெல்ல மெல்ல மாற்றங்காணத் தொடங்கியது. 1942ம்ஆண்டு கோயிலின் வடகிழக்குப் பக்கத்தில் (தற்போதைய இலக்குமி கோயில்) இருந்த திருமஞ்சனக் கிணற்றை மூடி  சரியான இடத்தில் தற்போதைய திருமஞ்சனக்கிணற்றை அமைத்தார்கள்.. கோயிலின் தெற்கு வீதியில் இடிந்தும், பற்றையாகவும் இருந்த பழைய கேணியை மூடவேண்டிய சூழல் உருவானது. இந்த கேணியின் படிக்கட்டுக்கள் வடக்குப் பக்கமாக பழுதடைந்த நிலையில் மழைகாலங்களில் வெள்ளமும் புகுந்து தூர்ந்து போயிருந்தது. இதனால் கோயில் மடப்பள்ளியின் வெளிச்சுவர் கொஞ்சம் சரிந்துபோனது. தவிர அருகில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் அதிகமாக உலாவும் இடம் ஆகையால் இந்த கேணியை மூடி அந்த இடத்தில் 1949ம் ஆண்டு, ஆவணிமாதம் “ஸ்ரீ கணேசா வாசிகசாலையை” அமைத்தார்கள். இந்த கேணியின் படிக்கட்டுக்களான வெண்கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு கோயில் கட்டிடவேலைக்கு பயன்படுத்தப்பட்டது.

 
கும்பாபிஷேகம் - 1961

 
எமது கோயிலிலே காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட திருப்பணிகளை பல்வேறுபட்ட அடியவர்கள் செய்து வருவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இந்தக் காலப்பகுதியில் கோயிலில் சில திருப்பணிகள் அரங்கேறின. விக்கினேஸ்வரப் பெருமானுடைய பாதாரவிந்தங்களைப் பற்றியோர் மேம்படத் தொடங்கினார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்தது. எல்லோரும் மனமுவர்ந்து திருப்பணிகளில்

 

வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம் காலத்துக்கு காலம்; ஆகமவிதிப்படி நடைபெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது. அந்த வகையில் 1961ம் ஆண்டு தைமாதம் 09ம் திகதி அடுத்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை கோயிலின் பிரதமகுரு சிவஸ்ரீ சி. சதாசிவக்குருக்கள் அவர்கள் ஆகமவிதிப்படி செய்து வைத்தார்கள். அன்று மாலை எம்பெருமான் பூந்தண்டிகையில் வீதியுலாவந்தார். கோயில் வருடார்ந்த மகோற்சவமானது 1961ம் ஆண்டின்பின் ஒழுங்காக ஆகமவிதிப்படி நடைபெறத்தொடங்கியது. சதய நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து புனர்பூசநட்சத்திரத்தில் பதினொராம் நாள் தீர்த்தத்துடன் நிறைவுபெற்றது. இதற்கு ஒருசில வருடங்களுக்கு பின் எழுந்தருளி விக்கிரமாக, வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு எம்பெருமான் விநாயகப்பெருமானுடன் வீதியுலாவந்தார். உற்சவத்தின் பன்னிரண்டாம் நாள் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. சுப்பிரமணியர் பிரதிஷடையின்பின் கார்த்திகை நட்சத்திரமும் கந்தசுவாமியார் வீதியுலாவரும் திருவிழாவாக உருவாகியது. 1963ம் ஆண்டுகளைத்தொடர்ந்து தைப்பூசம், வைகுந்தஏகாதேசி போன்றவையும் திருவிழாவாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

இதேஆண்டு தைமாத்தில் ஒரு சுபமூகூர்த்தத்தில் மணிக்கோபுரத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. இத்திருப்பணியானது மிகவும் விரைவாகவே நிறைவேறியது என்று கூறும் அளவிற்கு 1962ம் ஆண்டு 11ம் மாதம், 09ம் திகதி சிவஸ்ரீ சிவஞானக்குருக்கள் இதற்கான கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்துவைத்தார். அராலியூரைச்சேர்ந்த நாகமுத்து ஆச்சாரியாரினால் பொழிகற்களினால் பிரமாண்டமாக வானளாவியதாக கட்டப்பட்ட இக்கோபுரம் சுமார் 1700 இறாத்தல் நிறையுடைய கண்டாமணியை தாங்கிநின்றது. இந்த மணி பெரிய பிரித்தானியாவில் புகழ்பெற்ற றூவைந ஊhயிந டீநடட குழரனெசல னால் உருவாக்கப்பட்டு இங்கு கப்பலில் கொண்டுவரப்பட்டது. அதிகாலையில் டாங் டாங் என்று அடியவர்களை துயில் எழுப்பி அன்றாடவேலைகளைக் கவனித்து மாலையில் துயில் கொள்ளும்வரை ஆண்டவனின் பணியையும்  அடியவர்களின் அரியநேரத்தையும் நினைவூட்டிக்கொண்டிருப்பது இந்த மணியோசை.

 

கோயில் உற்சவகாலங்களில், எம்பெருமான் வீதியுலாவரும் வேளையில் “வடக்குவீதிச்சமா” என்பது அக்காலச்சூழலில் மிகவும் பிரசித்தி பெற்றதொரு விடயம் ஆகும். நிறைந்த தவில் வித்துவான்களைக் கொண்ட இணுவில் கிராமத்தில் தவில் கச்சேரிகளுக்கு குறைவிருக்காதுதானே? அந்த வகையில் சுவாமியை வடக்குவீதியில் ஆறவைத்து மணித்தியாலக் கணக்காக தவில்க்கச்சேரி நடைபெறும். அவ்வளவுநேரமும் சுவாமியை தோள்களில் வைத்திருக்கமுடியாது. எனவே சகடையை வேறு அயல்க்கோயில்களில் இருந்து இரவல் எடுத்துவந்தார்கள். இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.  1963ம் ஆண்டில் பழைய தேரின் அச்சுசிலவற்றைக் கொண்டும் புதிய மரங்களைக்கொண்டும் சகடை ஒன்று உருவாக்கப்பட்டது.

 

கோயிலின் முன்றலில் இராஐகோபுரம் இல்லாமல் தனியே மணிக்கோபுரம் தலைநிமிர்ந்து நின்றது. பலரது மனதிலும் கோபுரம் ஒன்று கட்டாயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. எண்ணம் செயல்வடிவமானது. 1964ம் ஆண்டு 10ம்மாதம் 20ம் திகதி கோபுரத்திருப்பணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று ஆலய மண்டபத்திலே நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆர்வமுள்ள அடியவர்பலரும் வந்திருந்தார்கள். மண்டபம் அடியவர்களால் நிறைந்திருந்தது.
 

கோபுரதிருப்பணியைப்பற்றி சிந்திக்க தொடங்கிய உடனேயே அதற்கான ஆயத்தங்களும் நடைபெறத்தொடங்கின. கோயிலின் முன்றலில் இருந்த கிணறு மூடப்பட்டது. இதற்கு பதிலாக கோயிலின் முன்னே சற்றுத்தொலைவில் (தற்போதைய தீhத்தமண்டபத்திற்கு முன்பாக) புதிதாக கிணறு ஒன்று வெட்டப்பட்டு வெண்கற்களால் அழகாக கட்டப்பட்டு அதற்கு துலா ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்பொழுதும் அடியவர்கள் இக்கிணற்றில்த்தான் கால் கழுவுகின்றார்கள். “கோபுரதரிசனம் கோடி புண்ணியம்”. ஒரு கோபுரத்தை அமைத்தல் என்பது சாதாரண விடயமல்ல, பாரிய பணி. அடியவர் சிலரின் ஆள்மனதில் ஏற்பட்ட வைராக்கியம் செயல் வடிவமானபோதும் அதற்கான அனுசரணை சரியாக கிடைக்கவில்லைத்தான். அடியவர்கள் தாமாகவே மனமுவர்ந்து அளித்த நிதி இந்த பணிக்கு போதுமா? இருந்தாலும் செயலில் இறங்கினார்கள். 1965ம் ஆண்டு தைமாதம் 8ம் திகதியில் ஓர் சுபமுகூர்த்த வேளையில் இதற்கான அத்திவாரம் இடப்பட்டது.

 

1971ம்ஆண்டு தைப்பூசத்தின்போது பெரியசப்பரத்திற்கான அச்சு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மிகவும் பலமான அடித்தளத்தையும், ஆறு சில்லுகளையும் கொண்டு, சுமார் நாற்பது பனைமரங்களின் பலத்தையும் உள்ளடக்கியதாக, பெரியசப்பரம் உருவாக்கப்பட்டது. இதே ஆண்டு வைகாசி ஒன்பதாம் திருவிழாவின்போது விநாயகப்பெருமானும், சுப்பிரமணியரும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த பெரிய சப்பரத்தில் வீதியுலா வந்து அருள்புரிந்தார்கள்.
 

 


கும்பாபிஷேகம் - 1972    (1961 – 1972 )

 இராஐகோபுரம்.

ஒரு மனிதனது உடல் அமைப்பை ஒத்ததாக ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த நிலையில் மனிதனுடைய பாதங்களுக்கு ஒப்பானதாக கோபுரங்கள் விளங்குகின்றன. இராஐகோபுரத்தின் வடிவம் ஒரு லிங்கத்தைப்போன்று இருப்பதனால் இதனை ஸ்தூல லிங்கம் என்று போற்றுவார்கள். இராஐகோபுரத்தில் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். எமது கோயில் கோபுர வேலைகள் மெதுவாக ஆரம்பித்தது. அத்திவாரக் குழியினை தொண்டர்கள் சேர்ந்து வெட்டினார்கள். ஊரில் உள்ள அடியார்கள் சிலர் இந்த பணிக்காக அல்லும் பகலும் பாடுபட்டார்கள். நிதிசேகரித்தர்கள். பொருள் சேகரித்தார்கள். சுருட்டுக்கொட்டில்கள் தனில் கட்டுக்கழிக்கப்பட்டது. ஆயினும் ஒரு குறுகிய காலப்பகுதியில் இப்பணியை முன்னெடுக்க முடியவில்லை. கோபுரம் மெதுவாக வளர்ந்தது.

 

 இதற்கிடையில் புததாக சித்திரத்தேர் ஒன்று அமைக்கும் பணி ஆரம்பமாகியிருந்தது. 1961ம் ஆண்டிற்குபின் கீழே சகடை அமைப்பைக்கொண்ட ஒரு கட்டுத்தேர், மேல்ப்பகுதி சிவப்பு,வெள்ளை சேலையால் அழகுபடுத்தப்பட்டு அந்தத் தேரிலே விநாயகப்பெருமான் வீதியுலா வந்தார். புதிதாக ஒரு சித்திரத்தேர் செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே ஆரம்பித்தது. 1966ம் ஆண்டு இத்திருப்பணி நிறைவு பெற்று, 04-05-66ல் தோ,; வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த தேரை சிற்பாசாரியார் திரு கந்தசாமி அவர்கள் அமைத்திருந்தார். இதே ஆண்டு மகோற்சவத்தின்போது  (24-06-1966); விநாயகப்பெருமான் புதிய சித்திரத்தேரிலே பவனிவந்தார்.

 சுமார் 65 அடி உயரமான இந்த இராஐகோபுரக் கட்டுமானப்பணியில்  பாராட்டுக்குரியவர்களே.

 இராஐகோபுர கும்பாபிஷேகம் 1972ம் ஆண்டு ஆவணிமாதம் 19ம் நாள் (04-09-1972) மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இந்த கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ சிவஞானக்குருக்கள் அவர்கள் செய்து வைத்தார்கள். இந்த கும்பாபிஷேகத்தின்போது “கோபுர கும்பாபிஷேக சிறப்புமலர்” ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்படாமல் களஞ்சியறையில் இருந்த சந்தானகோபாலர் கற்சிலை, கோயிலின் உள்வீதியிலே மூலஸ்த்தானத்திற்கு பின்பாக சிறிய ஒரு கோயில் கட்டப்பட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பின் சந்தான கோபாலர் எழுந்தருளி விக்கிரகமும் செய்யப்பட்டது. கிருஷ்ணnஐயந்தி, வைகுண்டஏகாதேசி மற்றும் தீர்த்தஉற்சவத்தின்போதும் சந்தானகோபாலர் வீதியுலா வருவார். இக்காலப்பகுதியில் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவுருவ வெங்கலச்சிலை சோமசுந்தர ஆசாரியாரால் வடிவமைக்கப்பட்டு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. திருவெம்பாவை பத்து நாட்களும் மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.

 
பாலஸ்தாபனம் - 1983.      ( 1972 -  1983 )

 1972ம் ஆண்டு கும்பாபிசேஷத்திற்கு பின், சுப்பிரமணியப்பெருமான் பவனிவருவதற்காக புதிய சித்திரத்தேர் ஒன்றும், சண்டேசுவரப்பெருமான் பவனிவருவதற்காக இன்னொரு சித்திரத்தேர்த் திருப்பணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. முருகப்பெருமானுக்குரிய தேர் திரு கந்தசாமி ஆசாரியாரால் 1975ம் ஆண்டு யூன் 10ம் திகதி உருவாக்கப்பட்டது. மூன்றாவது தேர் 1976ம் ஆண்டு சிற்பாசாரி திரு தம்பித்துரை அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆக மூன்று சித்திரத்தேர்களிலும் மும்மூhத்திகளும் தேரேறி வரும் காட்சி இக்காலப்பகுதியில் அடியவர்களுக்கு மிகவும் ஆனந்தமளிப்பமதாக இருந்தது.

 

1972ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்பின்பு இந்த குப்பாபிஷேகதினம் அலங்காரத் திருவிழாவாகவும் விமர்சையாக ஆவணிமாதத்தில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.  1973ம்  ஆண்டில் இருந்து சற்று வித்தியாசமாக எம்பெருமான் விநாயகர் யானைமீது, வீதியுலாவரும் மரபு இடம்பெற்றது. இது நான்கு தடவைகள் கண்டி, மற்றும் கொழும்பில் இருந்து யானை அதன் மூன்று பாகன்களுடன் யாழ்ப்பாணம் (இணுவிலுக்கு) கொண்டு வரப்பட்டது. அதிலும் முதல்த்தடவை கண்டியில் இருந்து ராஐh என்ற யானை கொண்டுவரப்பட்டது. அடுத்தடவை 1974ம் ஆண்டும் கண்டியில் இருந்து மகாராஐh என்ற யானை கால்நடையாகவே கொண்டுவரப்பட்டதாக அறிகின்றோம். அப்போதெல்லாம் இந்த உயிர் யானையைப் பார்க்கவே பெருந்தொகையான மக்கள் இணுவிலில் கூடுவார்கள். கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

 
இதன் தொடர்ச்சியாக 1977 ம்ஆண்டு கும்பாபிஷேகத் தினத்தை முன்னிட்டு தென் இந்தியாவில் இருந்து பிரபல சங்கீத இன்னிசை திலகங்களான சூலமங்கலம் சகோதரிகள் இணுவில் கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்றன. தனியான பேருந்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சல், ஆறு மின்னிணைப்புக்கள், ஒலி அமைப்புக்கள் என மிகவும் சிறப்பாக நடந்தது இந்த இன்னிசைவிருந்து. கோயிலின் வடக்கேயுள்ள அப்போதைய இணுவில் சைவப்பிரகாச மகாவித்தியாலைய மைதானத்தில் நடைபெற்ற இந்த பக்தி இன்னிசை விழாவிற்கு யாழ்ப்பாணத்தின் சகலபகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வந்தார்கள். இதேபோல யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப்பாடகர்களான ரி.எம் சௌந்தர்ராஐன், சீர்காழி கோவிந்தராஐன் போன்ற பலர் இந்த விநாயகர் திருக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளார்கள்.

 
இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம்  யாதெனில் பஞ்சமுக விநாயகரின் தோற்றம்.! இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலில் பஞ்சமுக விநாயகர் தோற்றம் பெறவேண்டும், என்ற அடியார்களின் நீண்டநாள் அவா இக்காலத்தில் நிறைவு செய்யப்பட்டது. 1976ம் ஆண்டு சோமசுந்தரம் ஆசாரியார் கைவண்ணத்தில் கோயில் முன்றலிலே உலோகங்களை உருக்கிவார்க்கும் இப்பணி தொடங்கியது. சுமார் தொள்ளாயிரம் இறாத்தல் பருமனைக்கொண்ட ஐந்து திருமுகங்களும், பத்துத்திருக்கைகளும் கொண்ட அழகிய தெய்வாம்சம் கொண்ட பிரமாண்டமான பஞ்சமுகவிநாயகரை உருவாக்கினார்கள். பஞ்சமுக விநாயகருக்கான கோயில் மகாமண்டபத்தில் கட்டப்பட்டது. தென்திசைநோக்கிய பஞ்சமுகவிநாயகரின் தரிசனத்தை வெளிவீதியில் நின்றே கிடைக்கத்தக்க வகையில் வாசலும் அமைக்கப்பட்டது. 1977ம் ஆண்டு தைமாதத்தில் பஞ்சமுக விநாயகருக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இக்கோயிலின் தற்போதைய பிரதம குருக்களும், கோயிலின் கிரியைகள், பூசைகளை மிகவும் சிறப்பாகவும், திறமையாகவும் ஒழுங்கமைத்தவருமான சிவஸ்ரீ வை.சோமஸ்கந்தக்குருக்கள் அவர்கள் 1977 தை மாதத்தில்  குருப்பட்டம் பெற்றதுடன் முதல்முறையாக பஞ்சமுகவிநாயகரின் பிரதிஷ்டையை இந்த கும்பாபிஷேகத்தில் செய்து வைத்தார்.  தேர்த்திருவிழாவின்போதும், மஞ்சத்திருவிழாவின்போதும்  பஞ்சமுகவிநாயகர் வீதியுலாவரும் காட்சி மிகவும் அற்புதமானது இவைதவிர தைமாதம் கும்பாபிஷேக தினத்தன்று தொடங்கி 48 நாட்கள் மண்டலாஅபிசேகம் நடைபெற்று பூர்த்தியின்போதும் எம்பெருமான் வீதியுலாவருவார். ஒருதடவையாவது எம்பெருமானை தங்கள் தோழில் சுமந்துகாவவேண்டும் என்று அடியார்கள் துடிப்பார்கள். அவ்வளவு ஆனந்தமானது இவ்வீதியுலா. இப்பணி.

 
எம்பெருமான் விக்னேஸ்வரனின் அருட்கடாச்சத்தால், விக்கினேஸ்வரன் மீது அன்புகொண்ட அடியார்கள் எல்லாரும் வாழ்வில் செல்வம் சிறப்பு கீர்த்தி பெற்று சிறப்படைந்தார்கள். வறுமை நீங்கி இலக்குமி கடாட்சம் பெற்றவர்கள் விநாயகனின் அம்சமான கஐலட்சுமி திருவுருவத்தை வடித்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். எண்ணம்
 

புதிதாக கைலாசவாகனம் ஒன்று அமைக்கும் பணி 1980ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திருப்பணி 1981ம் ஆண்டு நிறைவுபெற்று இதே ஆண்டு வருடார்ந்த உற்சவம் 2ம் திருவிழாவின்போது இக்கைலாச வாகனத்திலே எம்பெருமான் விநாயகரும், சுப்பிரமணியப் பெருமானும் வீற்றிருக்க, அடியார்கள் வீதியிலே வடம் பிடித்து இழுத்து வந்தார்கள். கைலாசவாகனத்தை தொடர்ந்து திருமஞ்சம் உருவாக்கும் பணியும் தொடங்கியது. அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய திருமஞ்சம் கொஞ்சம், கொஞ்சமாக வளரத்தொடங்கியது. 1985ம் ஆண்டு வைகாசிமாதம் திருமஞ்சம் வெள்ளோட்டம் விடப்பட்டு அதேஆண்டில் ஆறாம் திருவிழாவின்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமானுடன், சுப்பிரமணியர்,லக்ஷ்மி, சமேதராய், அழகாக ஆடி,அசைந்து வந்தது திருமஞ்சம். இது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு ஒரு சகடை உண்டு. ஆனாலும் அச்சகடையில் வைத்து சுவாமி இழுக்கப்படுவதில்லை. தொண்டர்கள் எம்பெருமானை தோளிலேயே சுமக்கின்றார்கள். சூரன்போர் திருவிழாவின்போது மட்டும் சகடையில் சுவாமி வீதியுலா வருவார்.

 
சமயகுரவர் நால்வருக்கான கோயில் ஒன்று கோயிலுக்கு தெற்கே அமைக்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த மாணிக்கவாசகர் சுவாமிகளுடன், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ஆகிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இன்னொரு முக்கியவிடயமாக கோயிலின் மின்சாரம் தடைப்படும் போதெல்லாம் தடங்கலின்றி பூசைகள் நடைபெறும்வண்ணம் விசேட மின்பிறப்பாக்கி (லைற் இன்சின்) வாங்கிப் பொருத்தப்பட்டிருந்தது. ஆரம்ப காலங்களில் இருந்தே மிகவும் சீரான மின்வினியோகம், மின்இணைப்புக்கள் என்பன கோயிலுக்கு இன்னொரு பலமாகும். உற்சவகாலங்களின் போதெல்லாம் வெளிவீதிகளுக்காக பிறிதொரு மின்பிறப்பாக்கிகள் பொருத்தும் நடமுறை இருந்து வந்துள்ளது.

 
திருவிழாவென்றால் விடியவிடிய தவில்,நாதஸ்வரக்கச்சேரி, வில்லுப்பாட்டு, தாளவாத்தியக் கச்சேரிகள், இசைக்கச்சேரிகள், வானவேடிக்கைகள், சப்பரம்,சிகரம், சின்னமேளம் என்று ஒருகாலம் சென்றுவிட, தொலைக்காட்சிகளின் வருகையால் கோயில்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டும் இப்படியான காலச்சூழலின் தாக்கங்களுக்குள் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலும் சிக்கிக்கொண்டது. ஆனாலும் எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து இந்த நிலை முற்றாக மாற்றங்காண தலைப்பட்டது. “கோயில் என்றால் ஒரு சமயச் சொற்பொழிவு போதும்” என்ற இயல்பான நிலைக்கு இந்த சமூகமானது தன்னை தயார்படுத்திக் கொண்டது. உதாரணமாக முன்னரெல்லாம் கொடி இறக்குதல் என்றால் அது ஒரு திருவிழாவாக யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த நிலை இப்போது இங்குள்ள எந்தஒரு கோயில்களிலும் கிடையாது. இதையொரு மாற்றமாகவோ அல்லது கோயில், உற்சவங்கள் பற்றிய ஒரு தெளிவாகவோ எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.  கோயில்களுக்குள் ஆண்கள் மேலங்கியுடன் செல்லக்கூடாது என்ற நாவலர்கால யாழ்ப்பாணக் கலாசாரம் இங்கு இன்றும் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் தவில்,நாதஸ்வர கச்சேரியின்போது சினிமாப்பாடல்கள் வாசிப்பதும் தவிர்க்கப்பட்டு இறைவன்மீது பக்திப்பாமாலைகள் இசைப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

 
கும்பாபிஷேகம் - 1984

மாற்றம் என்பது இயற்கையானது. அதிலும் நவகாலணித்துவத்தின் பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் சமூகத்தில் ஏனைய காரணிகளிலும் தன் செல்வாக்கை செலுத்தியது. விவசாயிகளாலும், சுருட்டுத் தொழிலாளர்களினாலும் நிறைந்திருந்த இணுவில் கலை,கலாசார, கல்வி நிலைகளிலும், வணிகத்திலும் முன்னேற்றம் காணத் தலைப்பட்டது. கிள்ளிக்கொடுத்த அடியார்களுக்கெல்லாம் விநாயகன் அள்ளிக்கொடுத்தான்.    இந்த மாற்றமானது கோயிலிலும் அதன் செல்வாக்கை செலுத்தியிருந்தது. கல்வி, உயர்தொழில், வர்த்தகம் போன்ற அனைத்து வழிகளிலும் எம்மூரவர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்த செழுமைமிகு சமுதாயத்திற்கு வித்திட்ட விநாயகனை எவரும் மறந்திலர். எம்முன்னோர் எமக்காக விட்டுச்சென்ற திருப்பணிகளை தொடர்வோம் என்று எண்ணினார்கள் எண்ணம் செயலாகியது. எமது திருக்கோயிலின் வளர்ச்சியில் பாரியதொரு பரிணாமத்தை ஏற்படுத்திய பாலஸ்த்தாபன ஆண்டாக அமைந்தது 1983ம்.ஆண்டு.

 
இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலின் உள்வீதி, தம்பமண்டபம் போன்றவை அப்போதெல்லாம் மிகவும் குறுகியதாக இருந்தது. களஞ்சியறை அப்போது தெற்குவீதியின் உட்புறம் அமைந்திருந்தது. களஞ்சியறை மடப்பள்ளி என்பன அகற்றப்பட்டன. தெற்குச்சுவர் முற்றாக உடைக்கப்பட்டு உள்வீதி விஸ்த்தரிக்கப்பட்டது. மடப்பள்ளி கிழக்குப்பக்கமாகவும், களஞ்சியறை வடகிழக்கு மூலையிலும் அமைக்கப்பட்டன. கோயில் உட்சுவரில் பஞ்சபுராணங்கள் எழுத்துருவில் வரையப்பட்டன. 1972ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு பிறகு இராஐகோபுரம், மற்றும் கோயிலின் சுற்றுப்பிரகாரங்கள், மற்றும் வாகனங்கள் போன்றவைக்கு வர்ணம் பூசப்பட்டது. கர்ப்பக்கிரகம், அhத்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம் போன்றவற்றில் இருந்த சட்டவிளக்குகள் அகற்றப்பட்டு சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய செப்புத்திருவாசிகள் பொருத்தப்பட்டன.

 
1984ம் ஆண்டில் இன்னொரு சிறப்பம்சம் யாதெனில், கல்யாணமண்டபம். சிலவருடங்களுக்கு முன்னரே கோயிலின் தெற்கு வீதியில் அமைந்திருந்த பள்ளிக்கூடம் அவ்விடத்தில் இருந்து கோயிலின் வடக்கு வீதியில் அமைந்திருந்த பிரதான கட்டிடத்தொகுதியுடன் இணைக்கப்பட்டது. புதிய ஒரு கட்டிடத்தில் ஆரம்பபப்பாடசாலை இயங்கத்தொடங்கியது. கணேசாவாசிகசாலை பொங்கல் கொட்டில் போன்றவையும் இடிக்கப்பட்டன. அவ்விடத்தில் இருந்த சகடைக்கொட்டில், இரண்டு தேக்கமரம், நெல்லிமரம் என்பனவும் அகற்றப்பட்டன. அவ்விடத்தில் கல்யாணமண்டபம் ஒன்று கட்டும் பணி ஆரம்பமாகியது. இந்த பணிக்கு கோயில் தொண்டர்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒவ்வொரு தூண்களினதும் குழிகளை வெட்டியதில் இருந்து, கொங்கிறீற் கலவை கொடுத்தது வரை மிகவும் உற்சாகத்துடன் பணியாற்றினார்கள். அந்த மண்டப பணியில் ஒற்றுமையாகவும், தியாகசிந்தையுடனும் இந்த உன்னதநோக்கத்திற்காக பாடுபட்டார்கள். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. இணுவில் பரராஐசேகரப்பிள்ளார் கோயில் கல்யாணமண்டபம் மலர்ந்தது. 1984ம் ஆண்டு கும்பாபிசேகத்தை தொடர்ந்து முதலாவதாக எம்பெருமான் சுப்பிரமணியருடைய திருக்கல்யாணம் இங்கு நடைபெற்றது.

 
ஐpர்ணோத்தாரண ஸ்வர்ண பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் 1984ம் ஆண்டு (06-02-1984) ருதிரோற்காரி வருஷம் தைத்திங்கள் 23ம் நாள் காலை 7.07 மணிக்கு கொட்டும் மழையிலும் கோபுரகும்பாபிசேகமும், 7.29 மணிக்கு மஹா கும்பாபிசேகமும் சிறப்பாக நடந்தேறியது. அன்றைக்கு முதல்மூன்று நாட்களும் மழைபெய்து வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது. அன்றையதினம் அடியார்களால் மருதனார்மடம் பல்லப்ப வைரவர் கோயிலில் இருந்து 108 பால்க்காவடிகள் எடுத்துவரப்பட்டன.  மாலையில் நடராஐப்பெருமான் சிவகாமிஅம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்று இரவு எட்டு மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவந்து அடியார்களுக்கு தரிசனம் கொடுத்தது ஆனந்தமான காட்சியாகும். இந்த கும்பாபிசேகத்தை மிகவும் சிறப்பாக நடாத்தி கோயிலில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தி வைத்தவர் கோயிலின் பிரதம குருவான சிவஸ்ரீ வை.சோமஸ்கந்தக்குருக்கள் ஆவார்.                                                                                       

 1984. குப்பாபிசேகத்தின்போது விசாலாட்சி அம்மன் சமேத, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட காசிலிங்கம், கோயிலின் நிருத்தமண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவகாமி அம்பாள், இராNஐஸ்வரி அம்பாள் ஆகிய மூர்த்தங்களுக்குரிய பிரதிஷ்டையும், ஸ்ரீ நடராஐப்பெருமான் வெங்கலத்தில் வடிவமைக்கப்பட்டு நிருத்தமண்டபத்தில் தென்திசை நோக்கிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுப்பிரமணியருக்கும், விநாயகருக்கும், தனித்தனியே வசந்தமண்டபம் அமைக்கப்பட்டது. சந்தான கோபாலருக்கான கோயில் பெரிதாக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கோயிலின் உள்வீதி, மற்றும் வெளிவீதிகள் என்பன சற்று அகலமாக ஆக்கப்பட்டு இது விஸ்த்தீரணமாக காட்சியளித்தது. குறிப்பாக கோயிலின் தென்கிழக்கு மூலையில் இருந்த கிணறிற்கு மேலாக கொங்கிறீற் பாலம் அமைக்கப்பட்டதன்மூலம் அந்த இடம் மிகவும் விசாலமாக காணப்பட்டது. மற்றும் வடமேற்கு மூலையும் விஸ்த்தீரணமாக்கப்பட்டது.

 
கும்பாபிஷேகம் - 1997.         (1984 – 1997 )

 1984ம் ஆண்டு கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து திருப்பணிவேலைகள் ஓரளவிற்கேனும் குறைந்திருந்தன. காரணம் கோயிலின் அடிப்படை வசதிகள் ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், அபிஷேகங்கள், பூசைகள், திருவிழாக்களெல்லாம் வெகுசிறப்பாக நடைபெற்றுவந்தன. இக்காலப்பகுதியில் இருந்து தீhத்தம், விசேடமாக தீர்த்தோற்சவத்தின்போது பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, கோயிலின் முன்றலில் உள்ள கிணற்றில் வெகுசிறப்பாக நடைபெறத்தொடங்கியது.  வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமான் மாலையில் வீதியுலா வந்து அருள்பாலிக்கத் தொடங்கினார். தேய்பிறைச்சதூத்தியான சங்கடஹரசதுர்த்தியில் விசேஷபூசைகள் நடைபெற்று விநாயகர் வீதியுலா வருவார். காலையில் மெல்லிய இசையில் பஞ்சபுராணங்கள், பக்திப்பாடல்கள், மற்றும் தழிழ்இசைப்பாடல்கள் என்பன ஒலிபரப்பாகியது.  1987ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக அந்த வருடத்திலே உதயத்திலே சிறிய தேர் இழுக்கப்பட்டது. தீர்த்தமும் அதிகாலையிலே நடைபெற்றது. இந்த திருவிழா மாற்றமானது கோயில் வரலாற்றில் சற்று வித்தியாசமான ஒரு திருவிழா ஆண்டாக பதிவுசெய்யப்படுகின்றது.

 

1992ம் ஆண்டு தொண்டர்களால் பேரிகை ஒன்று உருவாக்கப்பட்டது. சங்கு, சேமக்கலம், தாளம், கொம்புவாத்தியம் என்பவற்றுடன். வெங்கலக் கொட்டுமேளம், பலாக்கொட்டு மேளம், இருதோல் மேளம், ஒருபக்கதோல் மேளம் என்பனவும் சேர்ந்து பேரிகையானது. ஆரம்பகாலங்களில் தினமும் காலை 6.30மணிக்கு நடைபெறும் காலைச்சந்தி பூசையின்போதும், மாலை அர்த்தசாமப் பூசையின்போதும் இது முழங்கியது. ஆனாலும் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு பின்பு இது மாலை அர்த்தசாமப் பூசையின்போதும், சுவாமி எழுந்தருளும்போதும், உற்சவகாலங்களில் கும்பபூசை பலி வைக்கும்போதும் இது முழங்கியது.

 
1990ம் ஆண்டு (02-12-1990) மார்கழி 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  தட்சணாமூர்த்தி, பூரணநந்தனார் துர்க்கைஅம்மன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் முறையே மூலஸ்த்தானத்திற்கு தென்திசைநோக்கியும், மேற்குதிசைநோக்கியும், வடதிசைநோக்கியும் உள்வீதியிலே அமைக்கப்பட்ட சிறிய சுற்றுப்பிரகாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தியை மஞ்சள் பூ கொண்டு வழிபடவரும் அடியார்களின் வேண்டுதல் இதன்மூலம் நிறைவேறியது. இதன்பின் 1997 கும்பாபிஷேகத்துடன் நர்த்தன விநாயகர், மற்றும் பிரம்ம கணபதி என்பன இந்த சுற்றுப்பிரகாரங்களுக்கு அருகாமையில்  தெற்குநோக்கியும், மேற்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை தவிர பிரதோஷமூர்த்தியின் பிரதிஷ்டையும், பிரதோஷ விதரத்தில் இம்மூர்த்தியின் வீதியுலாவும் பிரதோஷவிதரத்தை கடைப்பிடிக்கும் அடியார்களின் ஆனந்தத்திற்கு ஏதுவாய் அமைந்தது.

 1995ம் ஆண்டு ஆவணிமாதத்தில் தற்போதைய பிரதம குருக்களில் ஒருவரும், சிவஸ்ரீ வை சோமஸ்கந்தக் குருக்களின் மூத்தபுதல்வனுமாகிய சிவஸ்ரீ சோ.அரவிந்தக்குருக்கள் அவர்கள் குருப்பட்டம் பெற்றுக்கொண்டார்;. அன்றுமுதல் அவர்தம் தந்தையார் வழியில் கோயில் பூசைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 1999ம் ஆண்டு முதல்த்தடவையாக கொடிஏற்றியதுடன் அன்றுமுதல் தந்தையாருக்கு உறுதுணையாக இருந்து கோயில் கிரியைகளை மிகவும் சிறப்பாக இவர் நடாத்தி வருகின்றார். கோயிலின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

 ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற விதிக்கமைய 1995ம் ஆண்டு (வைகாசி உற்சவம் முடிந்ததும்) ஆனி மாதம்  கோயில் பாலஸ்த்தாபனம் செய்யப்பட்டது. இதற்கமைய 1996ம் ஆண்டு தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை, காரணமாக 30-10-1996ல் மக்கள் வலிகாமத்தை விட்டு இடம்பெயர்ந்தார்கள். இதனால் 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய முடியவில்லை. ஆனாலும் 26-04-1996ல் மீண்டும் இருப்பிடம் திரும்பியதும் திருப்பணிகள் மீண்டும் நடைபெற்றன.

 
கோயிலின் இராஐகோபுரத்திற்கு வலதுபக்கமும், இடதுபக்கமும் முறையே பாலவிநாயகர், பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கான கோயில்கள் அமைக்கப்பட்டன. பாலமுருகன், பாலவிநாயகருடன் சூரியர் சந்திரர் சிவன் அம்மன், மனோன்மணியம்மன் சந்திரசேகரர் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்களும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக நித்தியோற்சவமூர்த்தி இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டது. தினமும் மாலை சாயரட்டை பூசை நிறைவு பெற்றதும் அட்டதிக்குப் பலிகளை ஏற்கும் முகமாக இதற்கென பிரத்திகேயகமாக அமைக்கப்பட்ட சிறியதேரில் நித்தியஉற்சவ மூர்த்தி எழுந்தருளி ஆலய உள்வீதியை வலம்வந்து அருள்பாலிப்பார். ஊரில் உள்ள அடியார்களிடம் வீடுவீடாக சென்று செப்பு, பித்தளை, வெங்கலம் போன்றன சேகரிக்கப்பட்டு, கொடித்தம்பம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியனவற்றிற்கு ஐம்பொன்வேலி போடப்பட்டது.

 கோயிலின் உள்வீதியின் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன. வசந்தமண்டபம் புதிதாக கட்டப்பட்டது.  பழைய வசந்தமண்டபத்தின் வெண்கற்கள் கோயிலின் முன்றல் நிலத்தில் பதிக்கப்பட்டன. கோயிலின் முன்மண்டப கூரை அலங்காரவேலை மிகவும் அரிய தேக்கமரங்களைக ;கொண்டு செய்யப்பட்டது. இந்த மரங்களை தொண்டர்கள் வீடுவீடாக தேடிச்சென்று தறித்து எடுத்துவந்தார்கள். இந்த மரங்களைக்கொண்டு அழகான நான்கு யாழி கள் செய்து தம்பமண்டபத் தூண்களுக்கு பொருத்தப்பட்டன. வெளிவீதிகளுக்கனெ பிறிதொரு மின்பிறப்பாக்கி வாங்கப்பட்டது. இவற்றுடன் கோயிலின் முன்றலில் பொங்கல் மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

 
   முப்பத்துமூன்று  குண்ட உத்தமோத்தம மஹாயாக ஐpர்ணோத்தாரண ஸ்வர்ண பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் 03-02-1997ல் விநாயகர் பூசையுடன் கிரியைகள் ஆரம்பித்து, 09-02-1997ம் ஆண்டு, தாதுவருடம், தைமாதம், பூர்வபட்ச துதியைத்திதியும், சதயநட்சத்திரமும், சித்தாமிர்த யோகமும் கூடிய ஒரு சுபவேளையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, நூற்றுக்குமேற்பட்ட சிவாச்சாரியார்களின் ஒத்துழைப்புடன் ஆலயபிரதம குரு சிவஸ்ரீ வை.சோமஸ்கந்தக் குருக்களால் சிறப்பாக செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிசேகமும் நடைபெற்று 29-03-1997ல் சங்காபிஷேகத்துடன் மண்டலாபிசேகம் பூhத்தியடைந்தது.

 

கும்பாபிஷேக தினத்தன்று குளக்கரை சந்தியில் இருந்து கோயில் சுற்றாடல் வரை, மாவிலை,தோரணம், வாழைக்குலை என்பன கட்டப்பட்டன., கோயிலின் வடக்கு வீதியில் யாகப்பந்தல் அமைக்கப்பட்டது. கரும்பு, கமுகம்ஓலை, வாழை, இளநீர், தோரணம் கொண்டு அமைக்கப்பட்ட, யாகபந்தலில் கிரியைகள் ஆரப்பிக்கப்பட்டன. அப்போதைய காலப்பகுதியில் இடம்பெயர்வு காரணமாக அடியார்கள் குறைந்த எண்ணிக்கைகளிலே இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்கள். 108 காவடிகள் இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது. அன்றையதினம் தீக்குளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அன்றையதினம் தென்இந்தியாவின் பிரபல பின்னணிப்பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்கள் இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் மீது பாடிய பாமாலை, அருட் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் அற்புதமாகவும் உணர்ச்சிப் பிரவாகத்தில் ஊற்றெடுத்தோடும் இசைஅருவியாக இசைக்கப்பட்ட பாடல்களை கேட்ககேட்க பரவசமாக இருந்தது. ஆனந்தமாக இருந்தது. ஆனாலும் இந்த கும்பாபிசேகத்தின்போது நாட்டின் சூழ்நிலைகாரணமாக கும்பாபிசேஷக மலர் ஒன்றும் வெளியிட முடியவில்லை.

 பாலஸ்தாபனம் - 2008.           ( 1997 – 2008 )

 2000ம் ஆண்டு தீர்த்தமண்டபம் ஒன்றிற்கான அத்திவாரம் இடப்பட்டது. மிகவும் அழகான உயரமான, மண்டபமாக மூலஸ்த்தானத்திற்கு நேராக, கோயில் வாயில் கிணற்றுக்கு கிழக்கே இந்த மண்டபம் வளரத்தொடங்கியது. இந்த மண்டபத்திற்கு முன்பாக சுற்றிவர யானைகள் அலங்கரிக்க, தாமரை வடிவிலான தீர்த்தக்குண்டு ஒன்றும் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியின்போதும் பெருமளவிலான தொண்டர்கள் பாடுபட்டார்கள். 2001ம் ஆண்டு வைகாசிமாதம் திருப்பணிவேலைகள் நிறைவுபெற்று ஆறாம் திருவிழாவின்போது தீர்த்தமண்டபத்திற்கான முடிவைத்து கும்பம் வார்க்கப்பட்டது அந்த வருடத்தில் இருந்து தீர்த்தோற்சவம் இம்மண்டபத்திலேயே நடைபெறத் தொடங்கியது. இது மிகவும் சிறப்பானதொரு பணியாக கொள்ளப்படுகின்றது. 1928ம் ஆண்டிற்கு முன்பு திருமஞ்சனக்கிணற்றிலும், 1954ம் ஆண்டின்பின் புதிய திருமஞ்சனக்கிணற்றிலும்,(தற்போதைய) அதன்பின் 1984ம் ஆண்டில் இருந்து தற்பொழுதுவரை கோயில் முன்றலில் உள்ள கிணற்றிலும் தீர்த்தம் நடைபெற்று வருகின்றது.

 

இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலின் சிறப்பிற்கும், பெருமைக்கும் இன்னொரு காரணம் ஆசாரசீலர்களான அந்தணர் குலத்தைச்சேர்ந்த சிவாசாரியார்களின் பணிகள் ஆகும். இந்த கோயிலில் நித்திய பூசைகள், அபிஷேகங்கள், உற்சவங்களையெல்லாம் மிகவும் சிறப்பாகவும் ஆகமவிதிப்படியும் செய்து வருகின்றார்கள். பிரம்மஸ்ரீ த.நடராஐ ஐயர் அவர்களின் வழித்தோன்றல்களான சிவஸ்ரீ சின்னையாக்குருக்கள், சிவஸ்ரீசதாசிவக்குருக்கள், சிவஸ்ரீ சாம்பசிவக்குருக்கள். சிவஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள், ஆகியோர் காலத்திற்கு காலம் பூசைகளை பொறுப்பேற்று நடாத்தி வந்துள்ளார்கள். இவர்களில் நடராஐ ஐயர் அவர்களின் பேரன் சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் அவர்கள் சிறப்புற பணியாற்றியதுடன், சிறந்த குருபரம்பரை ஒன்றையும் கோயிலுக்காக தயார்படுத்தியுள்ளார். இவரின் ஆசிபெற்ற பரம்பரையினரான சோமஸக்கந்தக்குருக்கள், அரவிந்தக்குருக்கள் ஆகியோர் கோயில் பூசைகளை வெகுசிறப்பாக செய்து வருகின்றார்கள்.

 சிவஸ்ரீ சாதாசிவக்குருக்கள் 1961ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்துவைத்தபின், இடையில் சிலகாலம் 1962ல் இராமையாக்குருக்களும், 1963ல் இரத்தினேஸ்வரக்குருக்களும், 1964ல் கைலாசநாதக்குருக்களும், கொடிஏற்றினார்கள். அதன்பின் 1965ல் இருந்து 1984 வரை சிவஸ்ரீ வை சோமஸ்கந்தக்குருக்களின் மைத்துனரான சிவஸ்ரீ சிவஞானக்குருக்கள் அவர்கள் கொடிஏற்றியதுடன் குருக்களாகவும் இருந்து வந்துள்ளார். 1984ம் ஆண்டு மஹா கும்பாபிசேகத்தை செய்துவைத்த சிவஸ்ரீ வை.சோமஸ்கந்தக்குருக்கள் அவர்கள் அதன்பின் பூசைப்பொறுப்புக்களை ஏற்றதுடன். அவற்றை ஆகமவிதிப்படி திறம்பட நடாத்தி வருகின்றார். இவருக்கு உறுதுணையாக இவரது மூத்த புதல்வன் சிவஸ்ரீ அரவிந்தக் குருக்கள் இருந்து வருவதுடன். 2009ம் ஆண்டு மஹா குப்பாபிசேகத்தையும் இவரே செய்துவைக்கின்றார். இனிவருங்காலங்களிலும் கோயில் சிறக்க, விநாயக அடியார்கள் மேம்பட, நாடுசிறக்க  பூசைகளை ஆகமவிதிப்படி செய்யும் வண்ணம்,; திருவருள் பாலித்திருக்கின்றது.

  
இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கல்யாணமண்டபத்தில் நடைபெறும் திருமணங்களின்போது உணவு பரிமாறுவதற்காக இன்னொரு மண்டபம் தேவைப்பட்டது. அத்துடன் வாகனங்கள்; கோயிலின் உட்புறத்தில் இருப்பது இடநெருக்கடியை தோற்றுவிக்கவே புதியதொரு மண்டபம் கட்டும் சிந்தனை உதித்தது. இம் மண்டபத்தை அமைப்பதற்கான ஆதரவு  தாராளமாக கிடைக்கப் பெற்றமையால் இது மீண்டும் ஒரு நவீன வசதிகளுடன் கூடிய, பல்துறைநோக்கு கொண்டதாக சுமார் மூன்று மாடிகளையும், அழகிய முகஅமைப்பையும் கொண்டு நேர்த்தியாக கட்டப்பட்டது. இம்மண்டபம்  09-05-2004ல் திறந்து வைக்கப்பட்டது. 10-05-2004 அன்று எம்பெருமான் விநாயகர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தார். அந்த நிமிடம் முதல் இம்மணிமண்டபம் இறையருள் கைகூடப்பெற்ற புனிதமண்டபமாக சேவையாற்றத் தொடங்கியது. அன்றில் இருந்து இன்றுவரை  திருமணங்களும், கலாசார, சமய, இலக்கிய, சொற்பொழிவுகளும், விழிப்பூட்டல் நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருநெறிய தமிழ்மறைக்கழக அறநெறிப்பாடசாலை வகுப்புக்களும், இங்கே நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் மூன்று திருமணங்களும் இங்கே நடைபெறத்தக்க முறையில் அனைத்து வசதிகளுடனும் இம்மண்டபம் அமையப்பெற்றது இதன் சிறப்பம்சம் ஆகும். இதன்மூலம் கோயிலின் இடநெருக்கடிகளுக்கான தீர்வு காணப்படாவிட்டாலும், திருமணமண்டபம் தொடர்பான இடநெருக்கடி இல்லாமல் திருமணங்கள் சிறப்பாக நடைபெற ஏதுவாக அமைந்தது. இணுவில் கிராமத்தில் இப்படியான திருமணமண்டபம் அமையப்பெற்றது வரப்பிரசாதமே! இந்த முயற்சியாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

 

மணிமண்டபத்திருப்பணியைத் தொடர்ந்து கோயிலின் முன்பகுதியில் பாலமுருகன், பாலவிநாயகர் கோயில்கள் இருக்கும் முன்மணிமண்டபம் திருத்தும் பணி ஆரம்பமானது. 1997ம் ஆண்டில் தற்காலிகமாக கூரைத்தகடு பொருத்தப்பட்ட இம்மண்டபம் ஆட்டங்காணத் தொடங்கியது. அதனால் அழகிய முகவாயில்களைக் கொண்ட, அழகிய தூண்களைக் கொண்ட, அழகிய கோபுரம்தாங்கி பொம்மைகளைக் கொண்ட, அழகிய வர்ணவேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியின்; மூலம் கோயிலின் முகப்பு அழகாக சற்று மாற்றியமைக்கப்பட்டது. கூடவே உட்கோயிலின் தூண்களில் அழகிய பல்வேறு விநாயகரின் வடிவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டன. தம்பமண்டபமும் அழகிய விநாயகரின் திருவுருவங்களால் நிறைந்திருந்தது. கோயிலின் உள்வீதி ஒரு கலைக்கூடமாக, தொடர் சிற்பங்களின் வடிவமாக அழகாக காட்சியளித்தது. 

 

எம்பெருமான் பஞ்சமுகவிநாயகரின் அருளினாலே கோயிலின் தென்திசையில் கல்யாணமண்டப முடிவில் கோபுரம் ஒன்று அமைக்கும் பணி ஆரம்பமாகியது. 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணி விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டது. அழகான ஐந்து தளங்களைக்கொண்ட இக்கோபுரம் பஞ்சமுகவிநாயகரின் வாசலை அழகுபடுத்தியது. சுமார் முப்பத்தேழு அடி உயரமான இக்கோபுரம் அழகிய கலைவடிவமாக நிறைந்த சிற்பங்களைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியை நவாலியூர் திரு தி. சந்திரன் குழுவினர் மேற்கொண்டார்கள். இத்திருப்பணியானது விரைவாக நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உடனடியாக கும்பாபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக கல்யாணமண்டபத்தின் தென்பகுதி வரிவர்க்கம், நாசிக்கூண்டு வேலைகளால் அழகுபடுத்தப்பட்டது. பஞ்சமுகவிநாயகரின் தெற்குவாயில் கோபுர கும்பாபிஷேகம் 06-05-2007ல்   சிவஸ்ரீ அரவிந்த குருக்களால் செய்து வைக்கப்பட்டது.

 நைய்வேத்திய பூசை

 
இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலில் அவல்,கடலை,சுண்டல், அருசிக்கொழுக்கட்டை, என்று பிள்ளையாருக்குரிய பிரசாதங்களையெல்லாம் அடியவர்களின் வேண்டுதலுக்கிணங்க குருக்கள் செய்து படைப்பார். பூசை முடிவின்போது அவை அடியார்களுக்கு வழங்கப்படும். இவைதவிர பஞ்சசாதங்கள், புளிச்சாதம், தயிர்ச்சாதம், கடுகுசாதம், நெய்ச்சாதம், சர்க்கரைச்சாதம், மோதகம், வடை, முறுக்கு, எள்ளுப்பாகு, இவற்றுடன் பஞ்சாமிhதம் போன்றவையெல்லாம் மிகவும் சுவையாக இங்கு செய்து தரப்படுகின்றது. கோயிலின் தென்கிழக்கு மூலையிலே மடப்பள்ளி இருக்கின்றது.

 

அடியார்கள் பொங்கல், மோதகநேய்வேத்தியம் செய்தல்,  போன்ற நேர்த்திக்கடன்களையும் தாங்களே இங்கு செய்யத்தக்க வசதிகளும் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக பொங்கல்க்கொட்டகை இந்த பொங்கல்கொட்டகைக்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஆரம்பகாலங்களில் தற்போதைய கோபுரம் இருக்கும் இடத்திற்கும் மடப்பள்ளிக்கும் இடையே பொங்கல் செய்து வந்தார்கள். பின்பு கோயிலின் தெற்கு உள்வீதியிலே தற்போதைய நால்வர் இருக்கும் கோயிலுக்கு அருகாமையில் மோதகம் பொங்கல் போன்றவற்றை செய்து வந்தார்கள். அதன்பின்பு கணேசா வாசிகசாலை இருந்த இடத்திற்கும், பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்கும் இடையில் (கேணி மூடியஇடம்) சிறிய ஒரு பொங்கல் கொட்டகையை அமைத்தார்கள். இந்த இடம் இதற்கு முன்பு சிறிதுகாலம் ஒரு பூந்தோட்டமாகவும் இருந்தது. செண்பகமரம், மல்லிகை, நந்தியாவத்தை, மஞ்சள் அலரி போன்றமரங்கள் இருந்தன. முன்னாலே ஒரு நெல்லியும் இருந்தது. அதற்கு முன்னாலே சகடைக்கொட்டகை இருந்தது. இந்த பொங்கல் கொட்டகை இருந்த இடமும் பின்பு மண்டபம் அமைக்கவேண்டி இருந்ததால் 1984ம் ஆண்டுக்கு பின்பு மாற்றப்பட்டு வடகிழக்கு முன்றலில் தேர்கொட்டகைக்கு மேற்காக சகடைக்கொட்டிலுடன் சேர்ந்து பொங்கல் கொட்டகை அமைக்கப்பட்டது. அதன்பின்பு இடம்பெயர்வின் பின் நடந்த கும்பாபிஷேகத்துடன் தற்போதைய பொங்கல் கொட்டகை கோயிலின் தென்கிழக்கு மூலையில் நாவல் மர நிழலில் அமைக்கப்பட்டது.

 
தொண்டுகள்.

 உழவாரப்படைகொண்டு சரியை வழியை கடைப்பிடித்த அப்பர் சுவாமிகள் முதற்கொண்டு, ஆண்டவனை அடையும் இலகுமார்க்கமான தொண்டுகளை இறைவனுக்காக செய்யும் அடியார் கூட்டம், இங்கு ஆரம்பம் முதலே ஏராளம். நெற்றிவியர்வை சிந்தி கோயில் அமைத்து, கோபுரம் அமைத்து, கிணறுவெட்டி முன்னோர் காட்டிய திருப்பணிகளை தொடர்வதையே சித்தமாக கொண்ட தொண்டர் குழாம் ஒன்று தங்கள் கரசேவையை இக்கோயிலுக்காக எம்பெருமான் பாதங்களில் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தினமும் கோயிலுக்கு விளக்கு வைத்தல். அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாகவே செய்யப்பட்டு வரும் முதற்பணியாகும். தினமும் கூட்டுதல் துடைத்தல் மினுக்குதல், பூவெடுத்தல், மணியடித்தல்.   என்று கோயிலின் நாளாந்த பராமரிப்பு வேலைகளை தொண்டர்களே செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் இரவில் கோயில் தொண்டர்களாலே கழுவப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சதுர்த்திக்கு முதல்த்தினம் வெளிவீதி புல்பூண்டுகள் வெட்டப்பட்டு கூட்டி சுத்தம் செய்யப்படுகின்றது. கோயிலின் வெளிவீதியில் மரங்கள் வளர்த்து பராமரிக்கப்படுகின்றது. வாகனம் துடைத்தல் கொம்பு கட்டுதல் காவுதல், உற்சவகாலங்களின்போது இதேபணிகள் மிகவும் நேர்த்pயாகவும், ஒழுங்காகவும் செய்யப்படும். தண்ணீர்ப்பந்தல் அமைத்து தாகசாந்தி செய்யப்படுகின்றது.

 

வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் செய்யப்படும் மகேஸ்வரர் பூசை, குழைசாதம் வழங்கல் கிரமமாக நடைபெறுகின்றது. உற்சவகாலங்கிளில் பன்னிரண்டு தினங்களும் மதியம் அன்னதானம் வழங்கும் சிறந்த ஒரு பணி முன்னெடுக்கப் படுகின்றது. வெள்ளிக்கிழமை மற்றும் விசேட தினங்களின்போதெல்லாம் கூட்டுப்பிரார்த்தனை, பஐனை பாடுதல், பஞ்சபுராணம் ஓதுதல் போன்றனவெல்லாம்  தொன்று  தொட்டே தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் சிறந்த பணியாகும். கந்தபுராணம் படிப்பு, விநாயகர் கதை படிப்பு, பெரியபுராணம் படிப்பு, திருவெம்பாவை, திருவாசகம் முற்றோதுதல் போன்ற இறைதொண்டுகளும் காலம்காலமாக இங்கு செய்யப்பட்டுவருகின்றது. இவைதவிர பிறமாவட்டங்கள், பிறநாடுகளில் கூட பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் தொண்டர்கள் இருக்கின்றார்கள். அல்லும் பகலும் இக்கோயில் பற்றியே சிந்திக்கத்தக்க இவர்கள். கோயில் திருப்பணிவேலைகளுக்காக பலம் சேர்க்கின்றார்கள். கோயிலுக்காக ஒரு குடைகூட வாங்கமுடியாமல் போயிற்றே என்று ஏங்கிய அடியார்களையெல்லாம் ஒரு கோபுரம் கட்டும் அளவிற்கு விநாயகன் உயர்த்தி வைத்துள்ளான். சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவைத்துள்ளான்.

 
கும்பாபிஷேகம் - 2009.

 
2008ம் ஆண்டு ஆவணிமாதம் கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அன்று முதல் திருப்பணிவேலைகள் இடம்பெறத்தொடங்கின. கோயிலின் கூரைகள் மிகவும் சேதமாக காணப்பட்டதனால் மழை காலங்களில் மழைநீர் உள்ளே வந்து கொண்டிருந்தது. இதன்காரணமாக கூரைகள் மாற்றியமைக்கப்பட்டன. கோயிலின் உட்பகுதிகளுக்கு வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டன. கோயிலின் மேற்கே பல்லவர் கட்டிட பாணியில் அமைந்த ஐந்து தளங்களைக் கொண்ட சுமார் முப்பத்தைந்து அடி உயரமாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. கூடவே பஞ்சமுகவிநாயகரின் வடக்குவாயில் கோபுரம் ஒன்று அமைக்கும் திருப்பணியானது 2008ம் ஆண்டு ஆவணிச்சதுர்த்தியில் தொடங்கப்பட்டது. இந்தக் கோபுரம் சோழர்கால கட்டிட கலை மரபில் மிகவும் வேகமாக ஐந்து தளங்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தையும் நவாலியூர் திரு தி சந்திரன் ஆசாரி குழுவினரே அமைத்துள்ளார்கள். இணுவில் மானிப்பாய் வீதியிலே கூட்டுறவுச்சங்கத்திற்கு மேற்கே சுமார் நாற்பத்தொன்பது அடிகள் உயரமாக இக்கோபுரம் அமைந்துள்ளது. ஆக இந்த கும்பாபிஷேகத்துடன் கோயிலின் நாற்றிசையும் வானளாவிய கோபுரங்களுடன் தெய்வீக கலைமணம்பரப்பி நிமிர்ந்து நிற்கின்றது. இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் கோயில்க் கட்டிடக்கலை. கோயிலின் முன்றலில் திருவாசி போன்றதொரு வளைவு கட்டப்பட்டு தீச்சுடர் சிற்பவேலைகளினால் அது மெருகூட்டப்பட்டுள்ளது. கோயில் வாசல் முகப்பில் மீண்டும் ஒரு மாற்றம். காலத்திற்கு காலம் பலவித மாற்றங்களை கண்டுகொண்டாலும், அவை கோயிலின் உன்னதமான கலை வடிவங்களாக, கோயிலின் சிறப்பிற்கு உறுதுணையாக அமைந்து வந்துள்ளது. இந்தக்காலப்பகுதியில் இடம்பெற்ற கட்டிட,  சிற்ப வேலைகளையெல்லாம்  நவாலியூர் தி. சந்திரன் குழவினரே  மேற்கொண்டனர்.

 

2009 கும்பாபிஷேகத்தின்போது விசேஷமாக இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட, ஐலகண்டகணபதி என்ற விக்கிரகம் கோயிலின் வடக்கு உள் வீதியிலே, பஞ்சமுக விநாயகருக்கு கிழக்குத்திசையிலே வடக்கு நோக்கியதாக பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. இந்த மூலவிக்கிரகத்தின் சிறப்பு யாதெனில் அடியார்கள் யாவரும் தம் இரண்டு கைகளாலும் ஐலத்தை அள்ளி கணபதியின் உச்சிமீது அபிசேகம் பண்ணமுடியும். இதன்மூலம் தாம்செய்த பாவங்களை யெல்லாம் கணபதி பொறுத்தருளி அருள்புரிகின்றார். வடக்கே பஞ்சமுக விநாயகருக்கான வாசல் ஒன்று திறக்கப்பட்டது. வடக்கு வீதியில் நின்றே பஞ்சமுக விநாயகரின் திருவுருவை கண்டு தரிசிக்கலாம்.  கோயிலின் தெற்கே கல்யாண மண்டபச்சுவர் இடிக்கப்பட்டு காற்றோட்ட வசதிகருதி புதிய கதவு வேலை செய்யப்பட்டுள்ளது. வழமைபோன்று இம்முறையும் கோயில் பூராகவும் வர்ணம் பூசப்படுகின்றது. பிரத்தியேகமாக திருநெறிய தமிழ்மறைக்கழக ஏற்பாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்கள் மிகவும் அழகாக, தத்துரூபமாக சிலைகளாக வடிவமைக்கப்பட்டு கோயிலின் தெற்கு உள்வீதியில் ஒரே பார்வையில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது.

 

நாற்றிசையும்  தெய்வீக எழில் கொஞ்சும் வானுயர்ந்த கோபுரங்களுடன்  வீதிகள் தோறும் மாவிலை ,தோரணம், வாளைகள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன. வீதியெங்கும் நந்திக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. எங்கும் பக்தர்கள் கூட்டம். காற்றினில் இனிய இசையில் வேதபாராயணம்  தவழ்ந்து வந்துகொண்டிருந்தது.  இந்த இனிய காலைப்பொழுதில்  மஹா கும்பாபிஷேகம் நிறைவேற எம்பெருமான் விநாயகனின் திருவருள் கைகூடியிருந்தது.

 
            திருவருள்மிகு ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயில்  முப்பத்து மூன்று குண்ட அதியுயர் மஹாயாக புனராவாத்தன ஸவர்ண பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்  தைத்திங்கள் 19ம் நாள், (01-02-2009) ஞாயிற்றுக்கிழமை கும்பலக்கண சுபமுகூர்த்த வேளையில்  இராஐகோபுர குமபாபிஷேகம் காலை 7.26 மணிக்கும், மஹா கும்பாபிஷேகம் காலை 8.15 மணிக்கும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை  சிவஸ்ரீ சோம.  அரவிந்தக்  குருக்கள்  செய்துவைத்தார்.

 கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் பூசை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருந்து 108 பால்க் காவடிகள்  எடுத்துவரப்பட்டன. மாலையில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்து, அருள்பாலித்த நிகழ்வுடன்  அன்றைய தினம் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது.

 
 
முடிவுரை

 இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலானது பெரும்பாலான திருப்பணிகளின் இலக்குகளை எய்தியுள்ளது. ஆனாலும் இனிவருங்காலங்களில் செய்ய வேண்டும், என்று நினைக்கின்ற சில அபிலாசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு காலத்தில் தீர்த்தக் கேணி இருந்தது. பின்னர் அது மூடப்பட்டது. சில வேளை கேணி மீண்டும் உருவாகலாம். முக்கியமாக உட்கோயிலில் நிறைந்து காணப்படும் தளபாடங்கள், வாகனங்கள், கொம்புகள், போன்றவை நிரந்தரமான இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியவையே.  வாகனங்கள் வணக்கத்திற்குரியவை. அவை அழிக்கமுடியாத காலத்தின்சொத்து. நாளைய வரலாறு. எனவே ஒரு நிரந்தர வாகனசாலை அமைத்து அவை பாதுகாக்கப்பட வேண்டும். தவிர இப்பிரதேசம் மன்னன் காலத்தில் மிகவும் பசுமையாக இருந்தது. அந்தப்பசுமை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். மரங்கள் பேணப்படவேண்டும். கோயிலுக்கு ஒரு நந்தவனம் அமைக்கப்பட வேண்டும். இவை மட்டுமல்ல இனிவருங்காலங்களிலும் இத் தொண்டுகளையெல்லாம் அடியார்களே செய்துவரல் வேண்டும். இவையெல்லாம் இங்குள்ள இளம் தொண்டர்களின் விருப்பங்கள் ஆகும். இப்படியெல்லாம் அமையவேண்டியது எம்பெருமான் விநாயகனின் விருப்பமானால் அது அப்படியே நடக்கும். எல்லாம் அவன் செயல். 

 இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயிலைப் பொறுத்தவரை இங்குள்ள சிறப்பு என்னவெனில் நித்திய பணிகள் முதற்கொண்டு கோயிலின் பராமரிப்பு வேலைகள் வரை அனைத்து வேலைகளையும் இங்குள்ள தொண்டர்களே செய்து வருவதாகும். இதுவரை காலத்தில் எந்தவொரு பணியாளரையும் நியமித்ததாக வரலாறு கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தபணி, தங்களுக்கு வகுக்கப்பட்ட பணி இதுவெனக் கருதி தனியாகவோ குழுக்களாகவோ, தாங்களே செய்து கொள்வார்கள். இவையெல்லாம் ஏதோ எழுதப்படாத சட்டங்களைப் போன்று தோற்றமளிக்கும். பிறர் கண்டு ஆச்சரியப்படுவார்கள். இந்தப்பணியை நீ செய் என்று யாரும் சொல்வது கிடையாது. இங்கு சொல்ல ஆளில்லை செய்ய ஆளுண்டு. எல்லோருமே செய்பவர்தான். இங்கு தலைவன் கிடையாது. எல்லோருமே தொண்டர்கள்தான். இந்த தொண்டர்களின் தலைவன் எல்லாம் வல்ல பரராஐசேகரப்பிள்ளையார்தான். எம்பெருமான் அருளினாலே எல்லாம் நடக்கும். நல்லபடியாகவே நடக்கும். இவ்வரலாறானது எம்பெருமான் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையாரது பாதங்களுக்கு சமர்ப்பணமாகின்றது.

 

இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயில் தொடர்பான இந்த தொகுப்பு கால அடிப்படையாகக்கொண்டும், தொண்டுகளின், அதன் பின்னணியை அடிப்படையாக கொண்டும் சிறந்த ஒரு வரலாற்றுச் சாதனமாக அமைகின்றது. இராஐபரம்பரைகள் பற்றிக்கூறும் உசாத்துணை நூல்கள் துணை கொண்டும், கோயிலின் திருப்பணிகள், வளர்சி, சிறப்பு பற்றிய செய்திகளையும் காலப்பின்னணியில் அமைக்கும் இம்முயற்சி எதிர்காலச் சந்ததியினர்க்காக  விட்டுச்செல்லப்போகும் சிறந்த ஒரு பொக்கிசமாகும். இந்த கோயில் காலங்காலமாக சிறப்பான ஒரு வளர்சியை பெற்றுக்கொண்டு வந்திருந்தாலும், இதுவரையில் அவைதொடர்பான சரியான, தொடர்ச்சியான ஆவணப்படுத்தல் எவையும் இடம்பெறவில்லை. திருப்பணிகள், அவைதொடர்பான ஆண்டுகள். கோயில் நிலையில் ஏற்பட்ட பிரதான மாற்றங்கள், என்பன இப்போது தொகுக்கப்படுகின்றது. இந்த கடினமான பணியை தன்னால் இயன்றளவு சிறப்பாக செய்ய, திருநெறியதமிழ்மறைக்கழகம் முயற்சி எடுத்துள்ளது. இங்கே ஆண்டுகள், திருப்பணிகள், அல்லது தொண்டுகள்  ஏதாவது தவறவிட்டிருப்பின் அவை திருத்தப்படவேண்டியவையே. இப்படியான சிறந்த ஒரு பணியை திருநெறிய தமிழ்மறைக்கழகம் இனிவரும் காலங்களிலும் மேற்கொள்ள விநாயகப்பெருமான் அருள்புரிவாராக.

  இந்த வரலாற்றுக்கட்டுரையில் 1800களின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை பல திருப்பணிகள் முன்னெடுக்கப் பட்டிருந்தாலும் இங்கே எந்தவொரு தனியடியாரினது பெயரும் இடம்பெறவில்லை. இது ஒரு குறையாகாது. காரணம், காலங்காலமாக எண்ணற்ற அடியார்களின் தொண்டுகள், திருப்பணிகள், அர்ப்பணிப்புக்கள் மூலம்தான் இக்கோயில் சிறப்படைந்து வந்திருக்கின்றது. இவற்றுக்கு யாரும் சொந்தம் கொண்டாடிடக் கூடாது. இங்கே பலவிதமான தொண்டுகள், பலவித அடியார்கள். உள்ளத்தால் கோயில் அமைத்த பூசலார் போன்ற, புலப்படாத இறைதொண்டு புரிந்த பல அடியார்கள். இக்கோயிலின் வளர்சியானது ஒரு குழந்தையின் பிரசவத்தில் இருந்து அதன் படிமுறை வளர்சிக்கு ஒப்பானது. இந்த சிறப்பிற்கு காரணம் விநாயக அடியார்கள்தான். இது ஒரு கூட்டுமுயற்சி. ஒரு சகாப்த தொண்டுகளின் வெளிப்பாடு. இந்த கோயிலின் சிறப்பிற்கு காரணம் விநாயக அடியார்கள்தான். அடியார்களின் பலமும், ஒற்றுமையும்தான், எம்பெருமான் பரராஐசேகரப்பிள்ளையாரின் திருவருள் என்னென்றும் இப்பணிகளை சிறப்படையச் செய்யும் என்று நம்புவோமாக.

இணுவில் ஸ்ரீ பரராஐசேகரப்பிள்ளையார் துணை.

 இந்த திருக்கோயிலின் வரலாறு வரைவதற்கு தகவல்கள் வழங்கியோர், ஆலோசனை வழங்கியோர், கட்டுரைவழங்கியோர், புகைப்படங்கள் வழங்கியோர் அனைவருக்கும் நன்றி
 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More