அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar
<< April 2019 >>
S M T W T F S
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30        
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Sunday, 21 April 2019
கல்யாணமண்டபம்

கல்யாண மண்டபம்

 இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கல்யாணமண்டபம்.

 

             

        இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கல்யாணமண்டபம் கோயிலுக்கு தெற்கே, வெளிவீதிக்கு உட்புறமாக வர்ண வேலைப்பாடுகளுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது. மிகவும் அழகான முகவாயில். விஸ்த்தீரணமான, காற்றோட்டமான தெய்வீக அருள்சுரக்கும் மண்டபம் இது. மண்டபத்தின் தெற்கே அமைந்துள்ள பஞ்சமுக விநாயகரின் கோபுரம், இம்மண்டபத்தை கோயிலின் ஒரு பகுதியாக இணைக்கும், எண்ணவைக்கும் மனப்பாங்கு பயபக்தியுடன் கூடிய, திருமணவாழ்வில் தடம்பதிக்கும் தம்பதியினரின் வாழ்வை வளம் படுத்துகின்றது. ஆசாரசீலர்களான எமது ஆலய சிவாச்சாரியார் இங்கு வரும் தம்பதியினரை ஆசீர்வதித்து, வைதீகமுறைப்படி திருமணபந்தத்தில் இணைத்து வைக்கின்றார்கள். மாலை,தோரணம்,அலங்காரங்களுடன், மணவறை, மேளம், நாதஸ்வரம் மற்றும் எல்லாவிதமான வசதிகளும் இங்குண்டு. அறுசுவை உணவுண்டு, அமுதுண்டு. ஆறி,அமர்ந்து செல்லலாம். மணமக்களை வாழ்த்தவரும் அன்பர்கள் அனைவரும் அமைதியாக மண்டபத் தரையில் விரிக்கப்பட்ட புற்பாயில் பணிவாக அமர்ந்து திருமணத்தை ரசிப்பார்கள். ஆலயத்தின் புனிதம் இம்மண்டபத்தையும் ஆட்கொள்கின்றது. இம்மண்டபத்தில் இருந்து கிடைக்கும் சிறிதளவு நன்கொடையானது கோயிலின் திருப்பணிகளுகே பயன்படுகின்றது.

இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் மணிமண்டபம்.


            இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் கல்யாணமண்டபத்தில் நடைபெறும் திருமணங்களின்போது உணவு பரமாறுவதற்கான இன்னொரு துணை மண்டபத்தின் தேவை உணரப்பட்டது. கூடவே கோயில் வாகனங்கள்; கோயிலின் உட்புறத்தில் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் இருப்பது இடநெருக்கடியை தோற்றுவிக்கவே இவ்விரு தேவைகளும் கருத்தில் கொள்ளப்பட்டது. இவ்விரு நோக்கங்களையும் மையமாககொண்டு கோயிலின் மேற்கு வீதியில் உள்ள காணி தயாரானது. இந்தக்காணியில் மண்டபம் அமைக்கும் பணி தொடங்கியபோது, இம்மண்டபத்தை அமைப்பதற்கான ஆதரவு  தாராளமாக கிடைக்கப் பெற்றமையால் இது மீண்டும் ஒரு நவீன வசதிகளுடன் கூடிய, பல்துறைநோக்கு கொண்டதாக சுமார் மூன்று மாடிகளையும், அழகிய முகஅமைப்பையும் கொண்டு நேர்த்தியாக கட்டப்பட்டது. திருமணங்களுடன் சிற்றின்ப நிகழ்வுகள் தவிர்ந்த,(சினிமா) கலாசார, சமய,இலக்கிய, சொற்பொழிவுகளும், விழிப்பூட்டல் நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன. திருநெறிய தமிழ்மறைக்கழக அறநெறிப்பாடசாலை வகுப்புக்களும், இங்கே நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் மூன்று திருமணங்களும் இங்கே நடைபெறத்தக்க முறையில் அனைத்து வசதிகளுடனும் இம்மண்டபம் அமையப்பெற்றது இதன் சிறப்பம்சம் ஆகும். பெரியஒரு குறை இதன்மூலம் நீங்கியுள்ளது. இணுவில் கிராமத்தில் இப்படியான திருமணமண்டபங்கள் அமையப்பெற்றதும் வரப்பிரசாதமே!

                  இந்த இரு மண்டபங்களும் கோயிலின் இரு காப்பரண்களாக, சேவைகளின் விஸ்த்தீரணத்தின் மூலம் ஒரு நிழல் விருட்சமாக இந்த ஊருக்கு சேவையாற்ற எம்பெருமான் விநாயகனின் அருள் என்னென்றும் கிடைக்கும். இந்த முயற்சியாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More